தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தல்: நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.
Recommended Video

தமிழகத்தில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் அனைத்துக்கும் ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பிப்ரவரி 26-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 13, 14 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலாது.
வரும் 19-ந் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20-ல் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22-ந் தேதி கடைசி நாளாகும். மார்ச் 22 மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கும் நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களுடன் 2 பேர் மட்டுமே செல்ல முடியும். முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications