சிவனும், அல்லாவும், ஏசுவும் காக்க வேண்டும்! இந்திய மக்களுக்காக வேண்டுகிறேன்! டி.ராஜேந்தர் உருக்கம்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம், இந்திய மக்களுக்கு நேரிடக்கூடாதென சிவபெருமானையும், அல்லாவையும், ஏசுநாதரையும் வேண்டுவதாக திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டி.ராஜேந்தர் உருக்கம்.! இந்திய மக்களுக்காக வேண்டுகிறேன்!

    இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். இதனால் அங்கிருந்து தமிழகம் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை மக்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக 'நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க' என்ற பாடல் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியாகியுள்ளது.

    இலங்கை மக்கள்

    இலங்கை மக்கள்

    இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர்," இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன்.

    டி ராஜேந்தர் பேட்டி

    டி ராஜேந்தர் பேட்டி

    "நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க நீங்க சொல்லுங்க" என்ற பாடலை பாடியுள்ளேன். இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தயை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலை பாடியுள்ளேன். தமிழ் இலக்கியவாதி அஷ்மின், தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதியவர். அவருக்கும் எனக்கும் நெடுங்காலமாக நட்பு உள்ளது. அவர் எழுதியுள்ள இந்தப்பாடலை நான் பாட வேண்டும் என்றார். எனவே, இலங்கை மக்கள் படும் பாடு உலகம் முழுக்க தெரிய வேண்டும் என்றே இந்த பாடலை பாடியுள்ளேன். இலங்கை மக்கள் படும் துயரம் நீங்க வேண்டும். இதனை உங்களிடம் தெரிவிக்கவே உங்களை சந்தித்தேன்.

    முள்ளிவாய்க்கால் கொடுமை

    முள்ளிவாய்க்கால் கொடுமை

    முள்ளிவாய்க்கால் கொடுமைக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குமான பதிலடியை ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார். கர்மா எப்போதும் விடாது. என் தமிழ் மக்களுக்கு, இலங்கை மக்களுக்கு உலகம் உதவ வேண்டும். இந்த பாடலை அனைவரும் பகிர வேண்டும் பரப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    வேண்டிக் கொள்கிறேன்

    வேண்டிக் கொள்கிறேன்

    இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு, அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம், இந்திய மக்களுக்கு நேரிடக்கூடாதென சிவபெருமானையும், அல்லாவையும், ஏசுநாதரையும் வேண்டிக் கொள்கிறேன். என பேசினார். டி ராஜேந்தர் வெளியிட்டுள்ள அந்த பாடலின் வரிகளில், "நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க, கவர்மெண்ட் சொல்லுங்க. நீங்க ஆட்சி செஞ்சு கிழிச்சது போதும் ஒடுங்க..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+