வடபழனி மெட்ரோ ரயிலுக்கு நாளை முக்கியமான நாள்..பூந்தமல்லி போரூர் மக்களின் கனவும் நிறைவேறுது
சென்னை: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை இறுதி ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை நிறுத்தங்களுடனும் மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வை மேற்கொள்ளும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது.
நாளை நடக்கும் ஆய்வின் முக்கிய அம்சங்களின் விவரம்
மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கு முன்பாக வழங்கப்படும் மிக உயரிய அனுமதி இந்த பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுதான். நாளை நடைபெறும் ஆய்வில் அதிகாரிகள் பின்வரும் விஷயங்களை நுணுக்கமாகக் கண்காணிக்க இருக்கிறார்கள்.

பிரேக்கிங் தொழில்நுட்பம்: ரயிலின் பிரேக் சிஸ்டம் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது சோதிக்கப்படும்.
தண்டவாள தரம்: அதிவேகமாக ரயில் செல்லும்போது தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் அதிர்வுகள் ஆய்வு செய்யப்படும்.
பயணிகள் பாதுகாப்பு: நடைமேடை கதவுகள், தீயணைப்பு வசதிகள் மற்றும் அவசரகால வெளியேற்ற வழிகள் உறுதி செய்யப்படும்.
கட்டுமான வசதி: ரயில் நிலையங்களின் தரம், மின்தூக்கிகள் (Lifts) மற்றும் படிக்கட்டுகளின் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
எங்கிருந்து எங்கே?
இந்த வழித்தடம் சென்னை மெட்ரோவின் வழித்தடம் 4-ன் (Corridor 4) ஒரு பகுதியாகும். இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரை உள்ள உயர்மட்டப் பாதையில் முதற்கட்டமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முக்கிய நிலையங்கள்: பூந்தமல்லி பணிமனை , பூந்தமல்லி புறநகர், குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி.
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. பூந்தமல்லி - போரூர் இடையிலான உயர்மட்டப் பாதை கட்டுமானப் பணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மிகத் தீவிரமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்டு இறுதி ஆய்வுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்குக் கிடைக்கும் நன்மை :
பூந்தமல்லி வடபழனி வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்வதற்கு ஆகும் பயண நேரம் பாதியாகக் குறையும். குறிப்பாக, ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களுக்குப் பெரிய விடுதலை கிடைக்க போகிறது. நாளை நடைபெறும் ஆய்வு திருப்திகரமாக அமைந்தால், அடுத்த சில வாரங்களிலேயே இந்த வழித்தடத்தில் பொதுமக்களுக்கான ரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications