தமிழ்நாட்டில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.. 39 லோக்சபா தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் வாபஸ் பெற்றதால் 950 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதேபோல தேர்தல் ஆணையமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாட்டில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் முடிந்தததையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் வாபஸ் பெற்றதால் 950 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 1085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கரூரில் 62 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். 135 பேர் இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தமிழக்த்தில் உள்ள 39 லோக்சபா தொகுதியில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications