நிர்மலா சீதாராமனுக்கு போன மனு! கிலோ பையாக இருந்தாலும் வரி கூடாது! முழங்கும் தமிழக குரல் யார் பாருங்க
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வியாபாரிகள் முக்கிய கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.. அது என்ன?
ஜிஎஸ்டி வரிவிதிப்பானது, உணவுப்பொருட்கள் வரை நீண்டுவிட்டது.. மத்திய அரசு சார்பில் உணவு பொருளான அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது..

அரிசி, பருப்பு வகைகள், மாவு வகைகள், கோதுமை, வெல்லம், சிறுதானியங்கள் என, எந்த அத்தியாவசிய உணவு பொருளாக இருந்தாலும், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பை-க்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது.. இந்த வரிவிதிப்பை கண்டித்து பல மாதங்களாகவே, பல்வேறு அமைப்புகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காரணங்கள்: இதற்கு அந்த அமைப்புகள் நிறைய காரணங்களை சொல்லி வருகின்றன.. எப்போதுமே, உணவு பொருட்களுக்கு வரி உயர்வு என்பது இதுவரை இருந்ததில்லை.. நம் நாட்டை பொறுத்தவரை, 80 சதவீதம் பேர் ஏழை மக்கள்தான்.
இதுநாள் வரைக்கும், அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்ததில்லை.. ஆனால், மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை இப்போது விதித்துள்ளதும், இந்த வரி அமலுக்கு வந்துள்ளதும்தான் மிகப்பெரிய சிக்கலை தந்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.
வர்த்தகம்: இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது... ஆனால், இந்த அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை விதிப்பதால், பெருத்த நட்டம் ஏற்படும் என்றும், உடனடியாக இந்த வரியை நீக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள்.. இதனை முன்னிறுத்தியே, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் எத்தனை கிலோ பையாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்..
வியாபாரிகள்: இதுகுறித்து தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாஷம் ஆகியோர் ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:
நிர்மலா சீதாராமன்: 22ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடக்கிறது.. அதனால், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், எத்தனை கிலோ பையாக இருந்தாலும் வரி விதிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
வறுத்த நிலக்கடலைக்கு, 12 சதவீதம் விதிக்கப்படும் ஜிஎஸ்டியை, 5 சதவீதமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துக்கு, 12 சதவீதமாகவும்; நுண்ணூட்ட உரங்களுக்கு 18 சதவீதமாகவும் போடப்பட்டுள்ள ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சில்: இதேபோல பிஸ்கட், ரஸ்க், வெண்ணெய், உலர் பழங்கள் போன்ற உணவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பு வணிகர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தி, எங்களது கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மனு அனுப்பப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஜிஎஸ்டி கூட்டம்: முன்னதாக, டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது என ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் டிவிட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறது.. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்தது.. இப்போது தேர்தல் முடிந்த பிறகு நடக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications