தக, தகவென கொழுந்து விட்டு எரிந்த தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம்
சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களில் தீ பிடித்து மளமளவென எரிந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தக, தகவென கொழுந்து விட்டு எரியும் தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம் #Chennai #Fire pic.twitter.com/wdYY87of9u
— Oneindia Tamil (@thatsTamil) July 27, 2019
சென்னை கோயம்பேட்டில், மிகப்பெரிய ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.
தீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன.

நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் சம்பவிக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இன்று சனிக்கிழமை. வீக் என்ட் என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்ற நிலையில், மேலும் பல பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கோயம்பேடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications