சென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
Recommended Video
சென்னை: தாம்பரம் அருகே ப்ரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் - தாம்பரம் அருகே உள்ள பகுதி சேலையூர். இங்குள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 32 ஆகிறது.
நியூஸ் ஜெ.தொலைக்காட்சியின் சென்னை செய்தியாளராக பணியாற்றியவர். இவரது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

மூச்சு திணறல்
நேற்று நள்ளிரவு, பிரசன்னா, அவரது மனைவி, தாய் ரேவதி மூவரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்தது. இதனால் அறை முழுவதும் புகை மூட்டமானதால் 3 பேருக்குமே மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்களால் தப்பித்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புகை வந்தது
இன்று காலை இவர்களது வீட்டுக்கு வேலைக்கார பெண் வந்து கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிற்குள் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் பதறியடித்து கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அதிர்ச்சி
அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு சென்றபோது, 3 பேருமே உடல் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளனர். செய்தியாளர் குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் மீடியா உலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications