சென்னை தேனாம்பேட்டையில் பயங்கர சப்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீ.. திகுதிகுவென எரிந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பயங்கர சப்தத்துடன் மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பி.பி.கோயில் தெரு உள்ளது. இங்கு அருகே பாபு தெருவில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) உள்ளது. இது அதிக சப்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது.

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ அருகே இருந்த மாடு கட்டும் இடத்திற்கும் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பதறி அடித்து ஓடி வந்து மாடுகளை மீட்டனர். இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்து தீயை அணைத்தனர்.
இவர்கள் வேகமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திகுதிகுவென தீப்பிடித்து எரிந்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே வெப்பத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவிலாவது தூங்கலாம் என்றால் இது போன்ற இடர்பாடுகளால் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications