பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய மின் கேபிள்.. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திடீர் தீ.. பதற்றம்
சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று திடீரென மின்சார கேபிள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதோடு தீவிபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
சென்னை புறநகர் குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். வெளிநோயாளிகளாக ஏராளமானவர்கள் தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் உள்நோயாளிகளாகவும் பொதுமக்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு நோய் பிரிவுக்கும் தனித்தனியாக வார்டுகள் உள்ளன. அவசர சிகிச்சைக்கு என்று தனிவார்டு அமைந்துள்ளது. இந்நிலையில் அவரச சிகிச்சை பிரிவுக்கு மின்சார கேபிள் வசதி வழங்கப்பட்டுள்ளது.

வெடித்து சிதறிய மின்கேபிள்
இந்த மின்கேபிள் வசதி அவசர சிகிச்சை பிரிவின் நுழைவுவாயில் வழியாக செல்கிறது. இந்நிலையில் தான் இன்று மாலையில் அவசர சிகிச்சை பிரிவின் நுழைவுவாயில் அருகே சென்ற மின்சார கேபிள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைபார்த்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக தீப்பற்றி எரிய தொடங்கியது.

போராடி அணைத்த ஊழியர்கள்
இதுபற்றி உடனடியாக மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக மின்சாரத்தை தடை செய்தனர். அதன்பிறகு மின்சார கேபிளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு போராடி அணைத்தனர். அதன்பிறகு மின்சார கேபிளில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியை ஊழியர்கள் தொடங்கினர்.

காரணம் என்ன?
இருப்பினும் மின்சார கேபிள் வெடித்து சிதறியதற்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனை வளாகத்தில் காலணிகளை கழற்றி வைப்பதற்காக ஸ்டேன்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேன்ட் வழியாக மின்சார கேபிள் சென்ற நிலையில் அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பெரிய விபத்து தவிர்ப்பு
இந்த சம்பவத்தால் குரோம்பேட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் தீவிபத்து நடந்தவுடன் உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரியளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications