சென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி!
சென்னை: வளசரவாக்கத்தில் இன்று பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை மற்றும் ராமாபுரத்தை இணைக்கும் முக்கிய சாலையை ஒட்டி ஏரி ஒன்று உள்ளது.
இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இங்கு சிறுவர்கள் தூண்டில் போட்டும் சிறிய ரக வலைகளை போட்டும் மீன்பிடிப்பது வழக்கம்.

காய்ந்த ஏரி
ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஏரி தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால் ஏரிக்குள் ஏராளமான மரங்கள் மற்றும் செடி கொடுகள் வளர்ந்து காய்ந்து போயிருந்தது.

குப்பை மேடான ஏரி
அதோடு மட்டுமின்றி சில சமூக விரோதிகள் சிலர் கட்டாந்தரையாக உள்ள இந்த ஏரியில் மது அருந்திவிட்டு மது பாட்டில்கள் மற்றும் டம்ளர்களை வீசி சென்றுள்ளனர். இதனால் ஏரியின் ஒரு புறம் குப்பை மேடாக காட்சியளித்தது.

பரவிய தீ
இந்நிலையில் ஏரியை ஒட்டி இருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் ஏரியில் தேங்கிக்கிடந்த குப்பையை கொளுத்தி விட்டனர். காற்றின் வேகத்தால் அந்தத் தீ மளமளவென காய்ந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளிலும் பரவியது.

கண் எரிச்சல்
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீப்பொறியும் புகையும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் கண் எரிச்சல் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர்.

கடும் அனல்
குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறினர். மேலும் மின்தடையும் ஏற்பட்டதால் கடும் அனலுக்கும் புழுக்கத்திற்கும் உள்ளாயினர்.

பெரும் பரபரப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் காலியானதை தொடர்ந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications