சென்னை ஏர்போர்டில் முதல் நல்ல மாற்றம் .. பல வருடங்களில் நடந்த பெரிய விஷயம்.. பயணிகளுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகின்றன. 2-வது ஓடுபாதையில், 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது சென்னையில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளும் செயல்பாட்டுக்கு வந்ததால் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்கள் இயக்கப்படுகிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா விமான நிலையங்களை ஒப்பிடும் போது, மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஆகும்.. விமானத்தை ஏர்போர்டில் இறக்குவதற்கு விமானிகளே வானில் வட்டமடித்தபடி தவமே இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வளவு நெருக்கடியான விமான நிலையம். நொடி கூட தாமதிக்காமல் விமானங்கள் டவுன் பஸ் போல் வந்து செல்லும் இடமாகும்.

Chennai airport flight

பிராட்வேயில் இருந்து தாம்பத்திற்கு போகும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். இரவை பொறுத்தவரை எல்லா நாட்டு விமானங்களும் வந்து இறங்கியபடி இருக்கும். சென்னை விமான நிலையத்தில் தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை ஒரு சிக்கல், நீண்ட காலமாக இருந்து வந்தது. என்ன சிக்கல் என்றால், அங்குள்ள இரண்டு ஓடு பாதைகளும் நேரத்தில் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது.

சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதை 3.66 கிலோமீட்டர் நீளமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோமீட்டர் நீளமும் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதையில், 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் மற்றும் தனி விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இரண்டு ஓடு பாதையிலும் ஒரே நேரத்தில் இயங்காமல் இருந்து வந்தது. இதனால் விமானங்களை அதிகமாக இயக்க முடியாத நிலை இருக்கிறது.

இந்த நிலையில் 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுத்தால் விமானங்கள் புறப்பாடு வருகை எளிதாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதேபோல் கூடுதல் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் என்கிற நிலை இருந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் விமானங்களை இயக்க இந்திய விமான நிலைய ஆணையம் எடுத்து வந்தது. அதற்கு வசதியாக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடுபாதையில் இருந்து மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல, ''டாக்ஸி வே'' என்ற இணைப்பு பாதைகள் பயன்படுத்தப்பட்டது.

எனினும் டாக்ஸி வே "பி" என்ற ''பிராவோ'' முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்ஸி வேயில், வேகமாக செல்ல முடியாத நிலை இருந்தால் விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது . இதையடுத்து இந்த டாக்ஸிவே பியை நேர்படுத்தும் பணிகள் நடந்தன. அந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதையில் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சென்னை விமான நிலைய 2-வது ஓடுபாதையில் 615 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் விமானங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்து 952 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் 2-வது ஓடுபாதையில் இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் அதிகமாக தாமதங்கள் ஏற்படாமல் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவைகள் செயல்படுத்தப்படும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
First good change at Chennai airport and

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+