முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட யார் மீதெல்லாம் வழக்கு? எப்ஐஆர் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 09-08-2021 என்ற நேற்று தேதியில் எஸ்.பி.வேலுமணி மீது FIR பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

    எஸ்.பி வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு!

    திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: 2014ம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் தான் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இருந்தன.

    எஸ்பி வேலுமணி 2014 முதல் 2018ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். இதேபோல் கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

    464 கோடி முறைகேடு

    464 கோடி முறைகேடு

    2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346,81 கோடி மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கி உள்ளார்.

    திமுக புகார்

    திமுக புகார்

    தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998 ன் கீழ் தவறு ஆகும். 2012ல் கொண்டுவரப்பட்ட டெண்டர் ரூல் படியும் தவறு ஆகும். இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது

    முதல் தகவல் அறிக்கை

    முதல் தகவல் அறிக்கை

    இந்த வழக்கில் புகாரின் பேரில் எஸ்பி வேலுமணி உடன், பி.அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரர் சந்திரசேகர், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனர் முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏக டெக் மெசினரி காம்பணன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமலி குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்ஷமி ஹோட்டல்ஸ் பி லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், ஏசூர் இஎஸ பிஇ இன்ப்ரா , கு ராஜன் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

    ஆதாரங்கள் சிக்குமா

    ஆதாரங்கள் சிக்குமா

    இதனிடையே நேற்று எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில்,இன்று சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஆதாரங்கள் எதுவும் சிக்குமா என்பது சோதனையின் முடிவில் தெரியவரும். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான் எஸ்பி வேலுமணிக்கு எதிரான இந்த நடவடிக்கை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+