11 ஆண்டுகளில் இதுதான் மோசம்! தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அளவு 50 டிஎம்சியை தாண்டவில்லை!
சென்னை: சுமார் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு குறைந்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டி காவிரி நீரைப் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பரிந்துரை அளித்தாலும் கர்நாடகா காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

இந்தாண்டும் கூட அதை நிலைதான். கர்நாடகாவில் மழை இல்லை.. எங்களுக்கு நீர் தேவை என்று சொல்லி காவிரி நீரை விட மறுத்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே, காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அளித்த பரிந்துரைப்படி மிகக் குறைந்த அளவில் நீர் கிடைக்கிறது.
காவிரி நீர்: இதற்குக் கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அங்கே கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பந்த் நடைபெற்றது. மேலும், நடிகர் சித்தார்த்தை மிரட்டி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் காவிரி நீர் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அளவு இந்தாண்டு 50 டிஎம்சியை தாண்டவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்திற்கு வெறும் 45.16 டிஎம்சி அடி மட்டுமே வந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 50 டிஎம்சி நீர் கூட வராமல் இருப்பது இது ஐந்தாவது முறையாகும்.
50 டிஎம்சி கூட இல்லை: பிலிகுண்டுலு அணையில் இருந்து வரும் நீரை கணக்கீடாகக் கொண்டு இந்த டேட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்யும் போது காவிரியில் இருந்து 50 டிஎம்சி அடி கூட வராமல் போவது இது ஐந்தாவது முறையாகும்.
இதற்கு முன்பு ஜூன் 2012 முதல் மே 2013 வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலம் வரை தமிழ்நாட்டிற்கு 40.15 டிஎம்சி அடி நீர் மட்டுமே கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நீர் கிடைத்துள்ளது. காவிரிப் பிரச்சினை உச்சத்தில் இருந்த 2016-17ஆம் ஆண்டில் கூட இதை விட அதிகமாகவே நீர் கிடைத்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு 53 டிஎம்சி அடி கிடைத்தது. ஆனால், இந்தாண்டு வெறும் 45.16 டிஎம்சி அடி மட்டுமே நீர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு கிடைக்கும்: 1974ஆம் ஆண்டு முதல் நம்மிடம் தரவுகள் இருக்கும் நிலையில், அதை ஆய்வு செய்து பார்க்கும் போது, 1987-88ஆம் ஆண்டில் தான் மிகக் குறைந்த அளவு நீர் நமக்குக் கிடைத்துள்ளது. அப்போது கர்நாடகாவில் இருந்து வெறும் 24.82 டிஎம்சி அடி நீர் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2003-04 ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நீரின் அளவு 75.56 டிஎம்சியில் இருந்து 109.89 டிஎம்சி அடியாக வரை இருந்துள்ளது.
இந்த டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது மீதமுள்ள எட்டு மாதங்களைச் சேர்த்தால் நமக்கு இந்தாண்டு 72 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்கலாம். கடந்த 1987-88, 2003-04 ஆண்டுகளிலும் இதே அளவு நீர் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணை விவரம்: கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவுக்குத் தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் அணைகளில் நீர் மட்டும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு சுமார் 1,000 கன அடியாக இருக்கிறது. அதேபோல அணையில் இருந்து திறந்து விடப்பட்டும் நீரின் அளவு 5,200 கன அடியாகவும் இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications