ஜெயலலிதா பெயரை ஏற்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநர்.. தவறாக செல்லி எடப்பாடி வெளிநடப்பு.. அனிதா பதிலடி
சென்னை: மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் மாற்றப்பட்டிருப்பதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநடப்பு செய்த நிலையில் அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் மாற்றப்பட்டிருப்பதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இந்த மசோதாக்களை ஆதரிக்கிறோம் என்று சொல்லியே பேசினார்.

மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரைவைவக்க வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்து அதில் அவர்கள் கருத்துக்களை எல்லாம் பேசிவிட்டார்கள். இப்போது வந்திருப்பது ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்கள், இங்கு அவையில் வைத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். இதில் அந்த குற்றச்சாட்டை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
எதற்காக எதிர்க்கட்சி தலைவர் அந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பது தெரியவில்லை.. மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாறியிருப்பதாக சொன்னார்கள். நிச்சயமாக மாற்றப்படவில்லை.. ஆனால் மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்க ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களில் அதுவும் ஒன்று. " இவ்வாறு அவை முன்னவர் கூறியதாக சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அவை முன்னவரான துரைமுருகன் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பெயரை மாற்றிவிட்டதாக உண்மையற்ற காரணத்தை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். இது தவறு என்று கூறினார். தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.. எந்த பெயரில் இருந்ததோ (ஜெயலலிதா பெயரில்) அந்த பெயரிலேயே தொடர்ந்து இருக்கின்றது. எனவே தவறான கருத்தை சொல்லி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார் என்பதை இந்த அவையில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications