காலில் விலங்கிட்டு துன்புறுத்தல்.. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் ஏற்பட்ட கொடூரம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விடுதலையான நிலையில், அவர்களின் காலுக்கு விலங்கிட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

பின்னர், இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீஸார் விசாரணைக்கு பின் பருத்தித் துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் காலில் விலங்கிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 31 மீனவர்களை மீண்டும் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித் துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
தமிழக மீனவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது கைகள், கால்களில் விலங்கு போடப்பட்டே சிறை அதிகாரிகளால் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். நீதிமன்றத்திற்கு வெளியே விலங்கிட்டு அழைத்து வரப்படும் மீனவர்களை வீடியோ எடுத்த ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனை யாழ்ப்பாண சிறையின் அதிகாரி கேமராவை தட்டிவிட்டு மிரட்டியதோடு, வழக்கு போடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். சிறை அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பத்திரிகையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர் மாணிக்கவேல் காலில் விலங்கிடப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு, இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications