விக்டோரியா கவுரி உட்பட சென்னை உயர்நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகள் பொறுப்பேற்பு- யார் யார்?
சென்னை உயர்நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகள் பொறுப்பேற்றனர்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உட்பட 5 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேருக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி ஏற்பு உறுதி மொழி செய்துவைத்தார்.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 9 பேரை நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இவர்களில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும்,
வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், ஜான் சத்தியன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து நேற்று குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி ஏற்பு உறுதி மொழி செய்துவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். தற்போது கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு மூலமாக நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது
புதிதாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களின் விபரங்கள் :

விக்டோரியா கவுரி:
நீதிபதி எல்.சி.விக்டோரியா கவுரி கன்னியாகுமரி மாவட்டத்தில் 1973-ம் ஆண்டு மே 21-ந்தேதி பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து, 1995-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சிவில், கிரிமினல், வரி, தொழிலாளர் தொடர்பாக ஏராளமான வழக்குகளில் ஆஜராகி உள்ளார். இவர், 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மத்திய அரசின் வழக்கறிஞராகவும், பின்னர் சி.பி.ஐ வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
நீதிபதி பி.பி.பாலாஜி:
சென்னையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 1996-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். இவரது தந்தை பி.பி.ராமானுஜம், சென்னை உயர்நீதிமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரிடம் ஜூனியராக சேர்ந்த நீதிபதி பி.பி. பாலாஜி, சிவில், கிரிமினல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இவரது தாயார் மைதிலி ராமானுஜம். மனைவி லட்சுமி பாலாஜி ஆடிட்டராக உள்ளார். இவர்களுக்கு அதிதி பாலாஜி, அவந்தி பாலாஜி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்:
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், 1973-ம் ஆண்டு மே 27-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் பிறந்தார். இவர் 1 வயது குழந்தையாக இருக்கும்போதே இவரது தந்தை குழந்தைவேலு இறந்து விட்டார். தாயார் கே.முத்துலட்சுமி மற்றும் தாய்மாமன் வருமானத்தில் இவர் பள்ளிப்படிப்பை அய்யம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் பள்ளியிலும் முடித்தார். மதுரை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று, 1999-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்ற, மூத்த வழக்கறிஞர் வி.கே.முத்துசாமியிடம் ஜூனியராக சேர்ந்தார். ஐகோர்ட்டு மதுரை கிளை 2004-ம் ஆண்டு தொடங்கிய பின்னர், அங்கு வக்கீலாக, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வந்தார். 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு கூடுதல் குற்றவியல் வக்கீலாக பணியாற்றியுள்ளார்.
நீதிபதி ஆர்.கலைமதி:
புதுச்சேரி மாநிலத்தில் 1968-ம் ஆண்டு நீதிபதி ஆர்.கலைமதி பிறந்தார். இவரது தந்தை எம்.ராமச்சந்திரன். தாயார் ஆர்.அனுசியா. புதுச்சேரி சட்டக்கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பை முடித்தார். 1995-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக பதவி ஏற்ற இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
நீதிபதி கே.ஜி.திலகவதி:-
1966-ம் ஆண்டு பிறந்த நீதிபதி கே.ஜி.திலகவதி, 1995-ம் ஆண்டு சிவில் நீதிபதியாக பதவி ஏற்றார். 2007-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, தற்போது சென்னை உயர்நீதிமன்ற ஜுடிஷியல் பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications