20 ஆண்டுகளுக்கு முன் பொது சிவில் சட்டத்தை வரிந்து கட்டி ஆதரித்த ஜெயலலிதா- இன்று அதிமுக எதிர்ப்பு!
சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தை அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான அதிமுக கடுமையாக எதிர்த்துள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுகவின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனையடுத்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பொது சிவில் சட்டம்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படும் நிலையில் அந்த கூட்டணியிலும் பொது சிவில் சட்டம் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி, பொது சிவில் சட்டத்தை தொடக்க நிலையில் ஆதரிப்போம் என கூறுகிறது. அதேபோல மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போம் என்கிறது. நல்லாட்சி வழங்க முடியாமல்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார்.

திமுக எதிர்ப்பு: தமிழ்நாட்டில் ஆளும் திமுக பொது சிவில் சட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கிறது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு இது ஆபத்து என கூறியிருந்தார். இதேபோல திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் பொது சிவில் சட்டத்தை உக்கிரமாக எதிர்க்கின்றன.
அதிமுகவும் எதிர்ப்பு: இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் இப்போது பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக எதிராகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் குறித்த எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். பொது சிவில் சட்டத்தை எந்த வடிவத்திலும் நிறைவேற்றக் கூடாது என கூறியிருந்தார்.
அன்று ஆதரித்த ஜெயலலிதா: ஆனால் அதிமுக 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பொது சிவில் சட்டத்தை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தது என்பதுதான் வரலாறு. 2003-ம் ஆண்டு மே 24-ந் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், அரசியல், சமூக, இயற்கையின் நியதிப்படி நாட்டின் இன்றைய மிக முக்கியஅவசியமாக பொது சிவில் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரித்து வாக்களிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முழுமையான ஆதரவு என சொன்ன ஜெயலலிதா: இதனைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ந் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நாடு முழுவதிலும் ஒரே மாதியான சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது இந்த நேரத்தில் அவசியமானது. அதைநான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த சட்டம் அவசியமான ஒன்று. இதனால் சிறுபான்மையினருக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட இந்தச் சட்டம் வழி செய்யும் என உறுதியாக கூறியிருந்தார்.
ராமர் கோவிலும் ஜெயலலிதாவும்: இந்த பேட்டியின் போதுதான், ராமருக்கு இந்தியாவில்தான் கோவில் கட்ட முடியும். வேறு எங்கு கோவில் கட்ட முடியும்?. எனவே ராமர் கோவில்கட்டும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு கோவில் கட்டப்பட வேண்டும். இது தொடர்பாக பா.ஜ.க.சட்டம் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. அப்படிக் கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதா, இல்லையா என்பதைபின்னர் முடிவு செய்வோம் எனவும் ஜெயலலிதா கூறியிருந்தார். ராமருக்கு இந்தியாவில்தானே கோவில் கட்ட முடியும் என்கிற ஜெயலலிதாவின் கேள்வி நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தது.
அதிமுக இன்று எதிர்ப்பு: ஆனால் அதன் பின்னர் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒருவித கனத்த மவுனத்துடன் இருந்த அதிமுக 2019 லோக்சபா தேர்தல் அறிக்கையில் அதை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தது. அந்த தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த தேர்தல் அறிக்கையை வழிமொழிந்து மீண்டும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது அதிமுக. இதனால் அதிமுக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி











Click it and Unblock the Notifications