மோடியை பார்த்து கற்றுக்கோங்க.. வெள்ள நிவாரணம் நேரடியாக அக்கவுண்டில் போடனும்.. அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களுக்கு ரொக்கமாக இந்த நிவாரண உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெள்ளம் வந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் வடியாமல் இருக்கிறது. அதனால் மக்களுடைய இழப்பு என்பது பெரிய அளவில் உள்ளது. எனவே நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவது மட்டும் இல்லை. எங்கே எல்லாம் சேதம் ஏற்பட்டு இருக்கிறதோ அதை மதிப்பீடு செய்து அதை சரி செய்ய வேண்டும்.
சல்யூட் அடிக்கவில்லை என சண்டை: அதை விட்டு விட்டு சவாலுக்கு தாயாரா... விவாதத்திற்கு தயாரா என்கிறார்கள். அவர்களே சொல்லிவிட்டார்கள் 42 சதவிகிதம் தான் வேலை நடந்து இருக்கிறது என்று.. இதை விட வெளிப்படையாக அமைச்சர் சொன்ன பிறகு விவாதமும் சவாலும் தேவையில்லை. கிருஷ்ணகிரி பகுதியில் கலெக்டர் சரியாக சல்யூட் அடிக்கவில்லை என்று சண்டை.. கன்னியாகுமரி பகுதியில் ஒரு அரசு அதிகாரி.. எம்.எல்.ஏக்கள், அமைச்சர் மனோ தங்கராஜ் போகும் போது எழுந்து நிற்கவில்லை என பிரச்சினை..
கொத்தடிமைகள் இல்லை: திமுகவினர் இதற்கு எல்லாம் காட்டும் கோபத்தை வெள்ள நிவாரண பணிகளில் காட்டினால் மக்களுக்காவது நல்லது நடக்கும். சல்யூட் என்பது மரியாதை இருந்தால் தானாக வரத்தான் போகுது. அடிப்படை மரியாதையை அரசு அதிகாரிகள் கொடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு அதிகாரிகள் கொடுக்கிறார்கள். அதைத்தாண்டி வரும் போது கும்மிடு போடுவதற்கு அதிகாரிகள் என்ன திமுகவின் கொத்தடிமைகளா..
அவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகள்தான். திமுக கொத்தடிமைகள் இல்லை. அரசு அதிகாரிகள் அவ்வளவுதான் மரியாதை கொடுப்பார்கள். ஆனால் தொண்டர்கள் அரசு அதிகாரிகளை மரியாதை இன்றி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ள மீட்பு பணியில் திமுக தொண்டர்கள் கவனம் செலுத்தினால் மக்களுக்காகவாவது புண்ணியமாக போகும்.
மோடியை பார்த்து கற்றுக்கொள்ளுங்க: நிவாரண தொகையை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு கிரெடிட் செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். ரேஷன் கார்டு இருக்கு.. ஆதார் கார்டு இருக்கு.. மொபைல் நம்பர் இருக்கு.. நேரடியாக சென்னை மாநகரத்திற்குள் யாரெல்லாம் இருந்தார்களோ.. அவர்களுக்கு நேரடியாக கிரெடிட் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுவது எல்லாம் நடக்காது.
இது எல்லாம் வாங்க ஆரம்பித்தால் ஒரு வருடம் ஆகிவிடும். எப்படி மோடி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை எலக்ட்ரானிக் முறையில் வங்கி கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் தமிழக அரசும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications