Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூ விற்கும் அம்மா.. ஐபோன் கேட்டு அடம் பிடித்த இளைஞர்.. 3 நாள் பட்டினி கிடந்து வாங்கிய கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞர் ஒருவர் 3 நாட்கள் பட்டினி கிடந்து அடம்பிடித்து ஐபோனை வாங்கியுள்ளார். பூ வியாபாரம் செய்து வரும் இளைஞரின் தாயோ தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவமானகரமான விஷயம். செல்போன் வாங்கி கொடுத்ததற்கு பதிலாக செருப்பால் அடித்து இருக்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

தற்போதைய நவீன கம்ப்யூட்டர் காலத்தில் செல்போன்கள் என்பது அனைவரது கைகளிலும் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் ஐபோன்களுக்கு என்று தனி ஒரு வாடிக்கையாளர்களே உண்டு.

iPhone Weird Trend

குறிப்பாக செல்வந்தர்கள் பலரும் ஐபோன்கள் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனக்கு ஐ-போன் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார். அம்மா முடியாது என்று சொல்லியும், 3 நாட்கள் பட்டினி கிடந்து ஐபோனை பெற்றுள்ளார். ஆனால் அவனது தாய் பூ வியாபாரம் தான் செய்து வருகிறார். தனது மகனின் ஆசைக்காக கஷ்டப்பட்டு சேர்த்த பணத்திற்கு ஐபோனை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் செல்போன் கடையில் ஐபோன் ஒன்றை வாங்குகிறார். கூடவே அவரது அம்மாவும் வந்துருக்கிறார். இளைஞர் ஐபோனை தேர்வு செய்ததும் அவனது தாய் பணத்தை கட்டுகிறார். தொடர்ந்து அந்த வீடியோவில் இளைஞரின் தாய் கூறுகையில், "நான் கோவிலுக்கு வெளியே பூ வியாபாரம் செய்து வருகிறேன். பெரிய வருமானம் கிடையாது. எனினும் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து வந்தேன்.

என் மகன் ஐ-போன் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தான். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். வாங்கி கொடுக்க முடியாது என்று கூறினேன். ஆனால் அவன் 3 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் பட்டினி இருந்தான். இதனால் எனக்கு மனக்கவலை உண்டானது. இதையடுத்து அவனுக்கு நான் சேமித்து வைத்த பணத்தில் ஐ-போன் வாங்கி கொடுத்தேன்.

இந்த பணத்தை சம்பாதித்து திருப்பி தரனும் என்று என் மகனிடம் கூறியிருக்கிறேன். அவனும் சரி என்று சொல்லியிருக்கிறான். என்று கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இளைஞரின் செயலை விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் ஆதங்கத்துடன் கருத்துக்களை கொட்டியுள்ளனர்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "அதிகப்படியான பாசம் காட்டுவது குழந்தைகளை சீரழித்துவிடும். எந்த எல்லை வரை பாசம் காட்ட வேண்டும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது கொடூரமான சம்பவம்.. எந்த பெற்றோருக்கும் இப்படியான மகன் இருக்க கூடாது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "அவமானகரமான விஷயம். செல்போன் வாங்கி கொடுத்ததற்கு பதிலாக செருப்பால் அடித்து இருக்க வேண்டும்.

பட்டினியாக கிடக்கட்டும் என விட்டு இருக்கலாம்.. இதுபோன்ற சுய நலம் கொண்டவர்கள் தங்கள் பேராசைக்காக தங்கள் பெற்றோரை விற்க கூட தயங்க மாட்டார்கள் என கொதிப்புடன் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, இந்த அம்மாவை நினைக்கும் போது பாவமாக உள்ளது. அவரது ரியாக்ஷனே தனது மனதில் என்ன நினைக்கிறார் என்பதை காட்டும் விதமாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+