பத்திரப்பதிவு கட்டணங்கள்.. நாடு முழுக்க மாநில அரசுக்கு நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற பகுதிகளில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாநிலங்களின் வரி வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரப்பதிவு கட்டணங்கள் ஆகும். பத்திரப்பதிவு கட்டணங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. பத்திரப்பதிவு துறை நிலம்-வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கும். ஒருவர் நிலம் இன்னொருவருக்கு மாறும் போது கணிசமான தொகை அரசுக்கு வரியாக கிடைத்து வருகிறது. இது தவிர முத்திரைத்தாள் என்கிற வகையிலும் கிடைக்கிறது.
இந்த கட்டணங்கள் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சதவீதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்வோருக்கு இந்த கட்டணம் சுமையாக உள்ளதால் இதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. பெட்ரோல் டீசல் மீது எப்படி மாநிலங்கள் வரி விதிக்கின்றனவோ அதுபோல் தான் பத்திரப்பதிவிலும் வரிகளை மாநில அரசுகள் விதிக்கின்றன.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி முறையில் நிலையான வருமான விலக்கு ₹ 50,000 லிருந்து ₹75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் புதிய வருமான வரி முறையில் 4 கோடி சம்பளதாரர்கள் பயன்பெறுவர் என்றும் கூறினார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் நகர்ப்புறம் 2.0வின் படி, நகரத்திலுள்ள 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் 10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் நிலச்சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்ப்புற பகுதிகளில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1,000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications