மாரடைப்பிலிருந்து பக்தர்களைக் காக்க 40 ஆயிரம் மதிப்புள்ள ஊசியை இலவசமாக வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்
சென்னை: மாரடைப்பு ஏற்படும் பக்தர்களை உடனடியாக காப்பாற்ற விலை உயர்ந்த ஊசியை இலவசமாக தர திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்கு வருவார்கள். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் புரட்டாசி மாதம் இன்னும் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரும். பலர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலைப்பாதையில் நடந்தே தரிசனம் செய்ய வருவார்கள்.

தரிசனம் செய்யவரும் பக்தர்கள் பலருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. பலருக்கு முதலுதவி செய்யப்பட்டு காப்பாற்றப்படுவார்கள்.சிலர் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள். இதனால் மாரடைப்பிலிருந்து பக்தர்களை உடனடியாக காப்பாற்ற விலை உயா்ந்த டெனெக்டேஸ் பிளஸ் ஊசியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையின் கீழ் டெனெக்டேஸ் பிளஸ் என்ற ஊசி மருந்து தயாா் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல பக்தர்கள் பலன்பெறுவார்கள். திருமலையில் உள்ள ராம்பகீச்சா ஓய்வு இல்லத்தில் உள்ள முதலுதவி மையத்தில் வெள்ளிக்கிழமை செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி இந்த மருந்தை வெளியிட்டாா்.
அப்போல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் ஏற்கெனவே திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இதில் நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மலை ஏறி வரும் பக்தர்களுக்கு இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளால் மாரடைப்பு ஏற்பட்டால் இந்த ஊசி மூலம் உடனடி பாதுகாப்பு கிடைக்கும்.

தென் இந்தியாவில் ரூயா மருத்துவமனை மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. திருப்பதி சுற்றியுள்ள 13 இடங்களில் இந்த ஊசி போடப்படும்.
சந்தையில் இதன் விலை ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் மக்களின் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் பொருட்டு தேவஸ்தனம் இந்த ஊசியை மருத்துவமனையில் இலவசமாக செலுத்தும். மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும். மாரடைப்பால் பெரும்பாலும் இந்த ஊசி பக்தர்களைக் காப்பாற்றும்.
ஐசிஎம்ஆா் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரூயா மருத்துவமனையின் நூறு கிலோமீட்டா் தொலைவில் உள்ள அரசு நல மருத்துவமனைகளை தோ்ந்தெடுத்து ஊசி போடப்படும். அதன் ஒரு பகுதியாக, சொந்த மாநிலம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்லும் வகையில் திருமலையில் உள்ள அஸ்வனி மருத்துவமனையை தோ்வு செய்திருப்பதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ம் உதல்வர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
