Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்லப்பிராணிகள் விளையாட தனி பூங்கா; இதுவே முதல்முறை! சென்னையில் எங்க வரப் போகுது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்லப்பிராணிகளுக்கு என்று தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு பூங்கா ஒரு கோடி ரூபாய் செலவில் சென்னையில் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு உயிர்கொடுக்கப்பட்டுள்ளதால் டிமாண்டி காலனி மக்கள் பெரிய அளவில் மகிழ்ச்சி மழையில் நனைந்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் சென்னை ஆயிரம் விளக்கு மாடல் ஸ்கூல் சாலையிலிருந்து வரும் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் சிறுமி சுதக் ஷாவை இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதனைத் தொடர்ந்து நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் சில நாட்களில் சிகிச்சை முடிந்து அந்தச் சிறுமி வீடு திரும்பினார்.

chennai pets park

சென்னையில் இதைப்போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே நடந்திருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட சம்பவம் முதல்வரின் கவனத்திற்குச் செல்லும் அளவுக்கு மிகப்பெரிய பிரச்சினையானது. இதற்கு முதல் காரணம், பொதுமக்கள் காலை, மாலை நடைப்பயிற்சிக்காகப் பயன்படுத்தும் அதே பூங்காக்களில் சிலர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுடன் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். தனது உரிமையாளர்களை மட்டுமே பார்த்துப் பழகிய நாய்கள் வெளியில் திடீரென்று பெரிய கூட்டத்தைப் பார்ப்பதால், அச்சத்தில் எகிறிக் கடிக்க ஆரம்பித்து விடுகின்றன.

ஹைதராபாத் போன்ற மெட்ரோ பாலிடன் சிட்டிகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துப் போய் உலாவ விடுவதற்கு என்று தனி பூங்காக்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு பூங்கா சென்னை தலைநகரத்திலேயே இல்லை. அதை மனதில் வைத்துக் கடந்த 10 மாதங்கள் முன்னதாக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு இதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார். அவரது தொகுதிக்கு உட்பட்ட டிமாண்டி காலனியிலுள்ள ஒரு பூங்காவைச் செல்லப் பிராணிகள் விளையாடுவதற்காக மாற்றும் திட்டத்தை 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் அனுமதி கோரி ஒரு கோரிக்கை வைத்தார். கூடவே சென்னை மாநகராட்சியிடமும் அனுமதி கோரி இருந்தார்.

chennai pets park

ஆனால், சென்னை பெருநகர மாநகராட்சி இதற்கான தேவை தற்போதைக்கு இல்லை என்று அப்போது திட்டத்தை ஒத்திப்போட்டுவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவைச் செல்லப்பிராணிகள் விளையாட்டு பூங்காவாக மாற்றக் கடந்த 2018 முதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் சார்பில் நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வைத்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது. ஆனால், சில காலமாகச் சென்னையில் குறிப்பான வளர்ப்பு பிராணியான நாய்களுக்குப் பொதுமக்களுக்குமான ஒரு மோதல் உண்டாகி இருக்கிறது. வளர்ப்பு பிராணிகள் பொதுமக்களைக் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. அதை உணர்ந்த சென்னை மாநகராட்சி இப்போது இந்த டிமாண்டி காலனி பூங்காவைச் செல்லப் பிராணிகள் விளையாட்டு பூங்காவாக மாற்ற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

chennai pets park

முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாய்கள் தங்க வைக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட உள்ளன. இங்கே செல்லப் பிராணிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஓடி ஆடி விளையாடவும் வசதிகள் செய்து தரப்பட உள்ளன. செல்லப்பிராணிகள் வளையங்களில் ஏறி விடுவதற்கும் பந்துகளைப் போட்டு உருட்டி விளையாடுவதற்குமான வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றன. இவர்களில் அதிகம் பேர் முறையான உரிமமும் வைத்துள்ளனர். ஆகவே, இந்தப் பூங்காவை மாநகராட்சி தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"பூங்காவுக்கு வரும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அந்தக் கட்டுப்பாட்டை நாங்கள் விதிக்கவில்லை. இருந்தாலும் செல்லப்பிராணி வைத்துள்ள உரிமையாளர்கள் விண்ணப்பித்து உரிய முறையில் உரிமத்தைப் பெறுவதை நாங்கள் ஊக்குவிக்கவே செய்கிறோம். இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தப் பகுதியில்தான் உரிமம் பெற்ற செல்லப்பிராணி உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர் என்பது உணர்ந்தோம். ஆகவே இந்தப் பூங்கா அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்தோம்" என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இதைப்போன்று செல்லப்பிராணிகளுக்கு என்று தனிப் பூங்கா தனி அமைப்பதை வரவேற்கிறோம். இதனால் செல்லப்பிராணி உரிமையாளர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்"என்கிறார் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஷரன். இது பற்றி மாநகராட்சி ஒரு அதிகாரி கூறுகையில், "சென்னையில் இதுவே முதல் பூங்காவாகும். ஆனால் டிமாண்டி காலனி பூங்காவிலிருந்து கிடக்கும் பொதுமக்கள் கருத்துகளின் அடிப்படையில் இன்னும் பல இடங்களில் இதே மாதிரி பூங்காக்கள் அமைக்க அதிகாரிகள் உரிய இடங்களை அடையாளம் காண உள்ளனர்" என்கிறார். நகரம் வளரவளர நெருக்கடி அதிகமாகிறது.

மக்கள் தங்களின் தேவைக்காக மட்டுமே இந்த உலகம் எனச் சுருக்கி யோசிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களை, அதன் மீது அன்பு செலுத்துபவர்களை விநோதமாகப் பார்க்கின்றன. இந்த உலகம் அந்த ஜீவன்களுக்குச் சொந்தமானதுதான். அதை மக்கள் உணரவேண்டும். அடுக்குமாடிக்குடியிருப்பு கலாச்சாரம் என்பது நாய், பூனை, ஏன் பல்லியைக்கூட அனுமதிக்காத ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே இந்த மாதிரியான பூங்காக்கள் மக்கள் மனதில் மீண்டும் ஒரு அன்பை விதைக்கும் என்பது மட்டும் உறுதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+