50 வருட தமிழக அரசியல் வரலாற்றில்.. முதல்முறை இப்படி நடக்கிறது! ஸ்டாலினின் மிகப்பெரிய மூவ்.. ட்விஸ்ட்
சென்னை: ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியன் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். கோவி செழியனுக்கு உயர்கல்வி நலத்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பெரும்பாலும் அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்படும். செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை: ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியன் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். கோவி செழியனுக்கு உயர்கல்வி நலத்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்த சாதனை நடக்கிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில்.. உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு ஆதிதிராவிட நலத்துறை இன்று வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் அக்கா கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தலித் பிரதிநிதிகளுக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சரவை மாற்றம்: இன்று அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். இன்று நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications