செஸ் ஒலிம்பியாட்.."தம்பியை"பார்த்ததும் குஷியான வெளிநாட்டு வீரர்கள்! செல்ஃபி எடுக்க குவியும் கூட்டம்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த செஸ் விளையாட்டு வீரர்கள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 'தம்பி' சிலையை பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறவுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டன.
Recommended Video
இதனையடுத்து இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் இந்தப் போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 6வது நாளாக வீரர்கள் தொடர்ந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். இன்று அதிகாலை முதல் மெக்சிகோ, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் வந்திறங்கினர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது. அப்போது விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தம்பி சின்னத்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications