சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அபார்ஷன் கேஸ்".. வசமாக சிக்கிய மணிகண்டன்.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்.. கைதாகிறாரா மாஜி?

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: "கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

நடிகை சாந்தினி கடந்த மாதம் திடீரென கமிஷனர் ஆபீசிலும், அடையாறு மகளிர் போலீசிலும் பரபரப்பு புகார்களை அளித்தார்.

"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பிடித்திருப்பதாக சொன்னார்.. கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னார்.. அவரை நம்பி நெருங்கி பழகினேன்.. 3 முறை கர்ப்பம் ஆனேன்.. 3 முறையும், அவரது நண்பரின் ஆஸ்பத்திரியில் அபார்ஷன் செய்தார்.. நாங்கள் பழகியது அவரது நண்பருக்கு தெரியும், கார் டிரைவருக்கு தெரியும், பாதுகாப்பு அதிகாரிக்கு தெரியும்" என்று கூறி அதற்கான சில ஆதாரங்களையும் அளித்திருந்தார்.

சாந்தினி புகாரில் மாட்டிக் கொண்ட மாஜி மணிகண்டன்.. சாந்தினி புகாரில் மாட்டிக் கொண்ட மாஜி மணிகண்டன்..

 மனு தாக்கல்

மனு தாக்கல்

சாந்தினி புகார் சொன்னதை உடனேயே மறுத்து பேட்டி தந்த மணிகண்டன், அடுத்தநாளே காணாமல் போனார்.. சம்பந்தப்பட்ட அவரிடம் இன்னும் விசாரணை ஆரம்பிக்கவில்லை.. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாமல் இருக்கிறது.. இதனிடையே, சாந்தினி அளித்த புகாரின்பேரில் அடையாறு மகளிர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. இந்த வழக்கில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

 விசாரணை

விசாரணை

அந்த மனு மீது விசாரணை நடத்திய ஹைகோர்ட்டு, கடந்த 9-ந் தேதி வரை மணிகண்டனை கைது செய்ய தடையும் விதித்திருந்தது. எனினும், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு

வழக்கு

இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாகவும், நடிகையை காயப்படுத்தியதாக சொல்வதற்கு எந்தவித மருத்துவ ஆதாரங்களும் இல்லை.. அதனால், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் அபார்ஷன் செய்ததாக போலீசார் தெரிவிப்பது தவறானது என்று வாதிட்டார்.

கைது

கைது

மேலும், தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் தன்னை காவல்துறையினர் கைது செய்யட்டும் என தெரிவித்த மணிகண்டன் தரப்பு, ஏப்ரல் 15ம் தேதி வரை தன்னுடன் சாந்தினி வசித்ததாக சொல்வதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.. அதனால், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து காவல்துறை தரப்பில் வாதிடும்போது, "விசாரணை இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், சாந்தினி மற்றும் டாக்டர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.. 3 முறை சாந்தினி அபார்ஷன் செய்துள்ளதால், முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது.. அதனால், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்ககூடாது.. அப்படி முன் ஜாமின் வழங்கினால் மணிகண்டன் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்று வாதிடப்பட்டது.

தள்ளுபடி

தள்ளுபடி

சாந்தினி தரப்பில் மேலும் சொல்லும்போது, "தன்னை திருமணம் செய்து கொள்வதான தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி முன் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்...!

English summary
Former ADMK Minisrer Manikandans bail petition dismissed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X