அவங்களையும் இப்படித்தான் ‘கிக்’ பண்ணனும்! என்ன ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டாரு! அவ்வளவு கோபமா?
சென்னை : சென்னையில் நேற்று நடந்த கால்பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 'நம்மை (அஇஅதிமுக) எதிர்ப்பவர்களை இப்படித்தான் பந்தாடனும்' என கூறியுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமார்.
அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் அதிகார போட்டிகளுக்கு துவக்க புள்ளியாக இருந்தது ஜெயக்குமாரின் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு.

டி.ஜெயக்குமார்
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து சாதாரண கட்சி நிர்வாகியாக வலம் வந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் என்ற நினைப்பில் இருந்த அவர், ஓ பன்னீர்செல்வம் தர்மருக்கு சீட்டு வாங்கி கொடுத்ததால் கடும் கோபத்தில் இருந்தார். அதன் வெளிப்பாடாகவே தற்போது வரை ஓ பன்னீர்செல்வத்தையும் அவர் தரப்பு நிர்வாகிகளும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கடும் கோபம்
தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட எந்த பதவிகளும் அறிவிக்கப்படாத நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாகவே பேசி வருகிறார் ஜெயக்குமார். செய்தியாளர் சந்திப்பில் எந்த கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லும் அவர் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஓபிஎஸ்சை ஒரு பிடி பிடிக்காமல் விடுவதில்லை.

இப்படித்தான் பந்தாடனும்
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற கால்பந்தாட்ட நிகழ்ச்சி துவக்க விழாவில் கலந்து கொண்ட ஜெயக்குமார் மிக ஆவேசமாக பேசினார். முன்னதாக அந்த போட்டியை துவக்கி வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 'அதிமுகவை எதிர்ப்பவர்களை இப்படித்தான் பந்தாடனும்' என கூறியுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் ஜெயக்குமார், ஓபிஎஸ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இப்படி செய்யலாமா?
இந்நிலையில் அதிமுகவை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும் ரீதியில் இரட்டை அர்த்த பாணியில் ஜெயக்குமார் இப்படி பதிவிட்டிருப்பதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினாலும், என்ன இருந்தாலும் ஒரு முன்னாள் அமைச்சர், அதுவும் சபாநாயகராக இருந்தவர் உதைப்பேன் என்ற வகையில் இப்படியா பதிவிடுவது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications