மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு..காப்பாற்றும் ராகுல்! செல்லூர் ராஜு பிறந்த நாள் வாழ்த்து.!
மதுரை: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மணம் இல்லை என்று கூற முடியாது எனவும், ராகுலின் விடாமுயற்சி, காங்கிரசை கட்டி காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக புதிய இ-சேவை மையத்திற்கான கட்டிட பூமி பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," மதுரை மேற்குத் தொகுதியில் பொதுமக்களின் நலனுக்காக 21 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இ-சேவை மையத்திற்கான அனைத்து உபகரணங்களும் பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கு பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
பிஜேபிக்கும் எங்களுக்கும் ஒட்டுறவு இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், நேற்று நானும் கூறிவிட்டேன். எதற்காக இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்.? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது. இடைத்தேர்தல் என்றாலே பொது பொது யுத்திகளை திமுக சட்டத்திற்கு புறம்பாக செய்யும்.! பணம் ஆறாக ஓடும் மக்களை எந்த வகையிலும் கவர்வதற்கு திமுகவினர் செயல்படுவார்கள்.

பாமக வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மணம் இல்லை என்று கூற முடியாது. ராகுலின் விடாமுயற்சி, காங்கிரசை கட்டி காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.
திமுகவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியில் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா? அதிமுக போல் திமுக தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும்.! திமுக தனித்து நிற்க தயாரா.? மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி சந்திக்க தயாரா.? ஜெயலலிதா போன்று ஒரு ஆணித்தரமான முடிவுவெடுக்க இன்றைய முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக தலைவர்களும் முடிவெடுப்பார்களா.? என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள் என்றார்.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு அவர் வாழ்த்து சொன்னது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காரணம் கடந்து முறை பிரச்சாரத்தின் போது உணவகம் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சக வாடிக்கையாளர்களுடன் சகஜமாக அமர்ந்து உணவருந்தியதோடு ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் தான் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டினார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்திருக்கும் அவர்,"நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்ற கேப்ஷனோடு பாராட்டி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணி அதிமுகவுக்கு எதிராக களத்தில் இருக்கிறது. மேலும் பாஜகவும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது பேசுபொருளானது. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications