ஐஎன்டியுசி -அதிமுக -அமமுக -பாஜக.. இப்போ திமுக! அதிமுக மாஜி எம்.எல்.ஏ சின்னசாமியின் பாலிடிக்ஸ் மேப்!
சென்னை: அதிமுகவிலிருந்து விலகிய (நீக்கப்பட்ட) முக்கிய பிரமுகர்கள் திமுகவுக்கு தாவும் படலம் தொடர்ந்து வருகிறது. அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் வரிசையில் புதிய வரவாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி திமுகவில் இணைந்திருக்கிறார். ஜெயலலிதாவால் கட்சியில் சேர்க்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமியால் வெளியேற்றப்பட்டவர் சின்னச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொழிற்சங்கத்தின் தொடங்கி, அதிமுக, அமமுக, பாஜக என பயணித்து தற்போது திமுகவில் ஐக்கியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் திமுகவை நோக்கி நகரும் படலம் தொடர்ந்து வரும் நிலையில், புதிய வரவாக முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி இன்று (டிசம்பர் 3) மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக தொழிற்சங்கம் முதல் அதிமுக, அமமுக, பாஜக என பல கட்சிகளில் இடம் மாறிச் சென்ற இவர், இறுதியாக திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. சின்னச்சாமி முதலில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவராக இருந்தவர்.

சின்னச்சாமி
2006 சட்டசபை தேர்தலின் போது ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட பிளவால், அவர் தலைமையிலான அணியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது சிங்காநல்லூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சின்னச்சாமி முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிமுகவில் இணைக்கப்பட்ட அவர், ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கையாளர் நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அதன் பயனாக அவருக்கு அதிமுக தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதிமுக பிரிவு
2011-ஆம் ஆண்டும் சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் கார்திக்கிடம் தோல்வியடைந்தார். இதன் பின்னர் ஜெயலலிதா மறைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அவருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், அதிமுக தொழிற்சங்கப் பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடி கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கோவை-சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
டிடிவி தினகரன்
பின்னர் சின்னச்சாமி டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் சேர்ந்து செயல்பட்டார். அதன் பின் 2024 பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தார். ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வந்தாலும், அவருடைய அதிருப்தி தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா காலத்திலும், அதற்கு முன்னும், பின்னும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு செல்வது சகஜம் தான். குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்கு செல்லும்அதிமுக பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில், செந்தில்பாலாஜி, சேகர்பாபு, முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், தங்க தமிழ்ச்செல்வன் என பலரைச் சொல்லலாம். சமீபத்தில் கூட அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தமிழக அரசியல்
சேர்ந்த புதிதிலேயே அவர்களுக்கு பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி மீது சில சீனியர் அதிமுகவினர் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவர்களில் முக்கிய புள்ளிகளை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. அதில் லேட்டஸ்டாய் இணைந்துள்ளார் சின்னசாமி. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுடன் சில திமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications