கட்சிக்காரங்களே பணத்தை சுருட்டியதால் தோற்றேன்.. பரபரப்பை கிளப்பிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சிக்காரர்களே சுருட்டியதால் திருவொற்றியூர் தொகுதியில் தான் தோற்றுப்போனதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக பணியாற்றிவர் அதிமுகவைச் சேர்ந்த கே.குப்பன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் தோல்வியடைந்தார்.

aiadmk thiruvottriyur

இந்நிலையில், திருவொற்றியூரில் நடைபெற்ற அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சைக் கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

"2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சியினரே சுருட்டியதால் திருவொற்றியூர் தொகுதியில் நான் தோற்றுப் போனேன். இந்த முறை அப்படி நடக்காது ராஜா, கனவு காணாதே.. பணம் கொடுக்க மாட்டேன்" என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு, கட்சியினரே அந்தப் பணத்தை சுருட்டி விட்டதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியதைக் கேட்டு அங்கிருந்த அதிமுகவினரே ஆடிப்போய்விட்டனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+