தவெகவுக்கு ஓட்டு அதிகம் விழக் காரணம் இதுதானாம்.. முன்னாள் IPS ரவி எடுத்த சர்வே முடிவு சொல்லும் சேதி!
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, ஓய்வுபெற்ற போலீசார் மூலமாக 234 சட்டசபை தொகுதிகளிலும் 2.34 லட்சம் பேரிடம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளார். அதில், தவெக 121 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், வயதானவர்கள் தவெகவுக்கு வாக்களித்ததற்காக சொன்ன காரணத்தையும் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 29ஆம் தேதி வெளியாகின.

பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தன. ஜேவிசி டைம்ஸ் நவ் அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆக்சிஸ் மை இந்தியா, விஜயின் தவெக 120 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல்துறையினரை பயன்படுத்தி 2.34 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் கிடைத்து, 121 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு காலம்காலமாக வாக்களித்த மக்கள் பலரும் தவெகவுக்கு வாக்களித்ததாக இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார். அவர்களிடம் காரணம் கேட்டபோது, தங்கள் பேரன், பேத்திகள் தங்களை தவெகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் வாக்களித்ததாக கூறியுள்ளனர் என்றும் ரவி கூறியுள்ளார்.
தவெக தனித்து ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பது முன்னாள் காவல்துறையினர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். சென்னை மண்டலம் உட்பட அனைத்து பகுதிகளிலுமே தவெக தொகுதிகளைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications