அடுக்கடுக்கான கொடுமைகள்.. குமுறிய நடிகை சாந்தினி.. எல்லாமே பொய்.. போலீசுக்கு போன மணிகண்டன் மனைவி
சென்னை: மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும், ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகவும், முன்னாள் அமைச்சரான அதிமுக பிரமுகர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்த பரபரப்பு ஓய்வதற்குள் மணிகண்டன் மனைவி கொடுத்துள்ள ஒரு புகார் அனலைக் கிளப்பியுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சிக்காலத்தில் மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது சென்னையில் அவரும் நானும் ஒரே வீட்டில்தான் தங்குவோம் என்று அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் நடிகை சாந்தினி புகார் அளித்தார்.
மணிகண்டன் மற்றும் தாங்கள் இருவரும் இணைந்து சாட் செய்த விவரங்களை அந்த புகாரில் சாந்தினி இணைத்திருந்தார்.

காப்பர் டி
நடிகை தனது புகாரில் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதுவரை மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், காப்பர்-டி எனப்படும் கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வைத்து, மணிகண்டன் உறவு கொண்டதாகவும், இதனால் தனது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக புகாரில் கூறியிருந்தார் சாந்தினி.

மாத விலக்கு
இன்னொரு அதிர்ச்சித் தகவலும் அவரது புகாரில் இடம் பெற்றிருந்தது. மாத விலக்கு காலத்தில் கூட மணிகண்டன் சென்னைக்கு வரும்போது கண்டிப்பாக உடலுறவு கொள்ள வேண்டும் என்று தன்னை வற்புறுத்தி உறவு வைத்துக் கொண்டதாகவும், இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்படைந்ததாகவும் கிடைக்கும் புகாரில் கூறியிருந்தார் சாந்தினி.

5 பிரிவுகளில் வழக்கு
தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த புகார் புயலைக் கிளப்பிய நிலையில் மணிகண்டன் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். இதேபோல கருக்கலைப்பு செய்த மருத்துவரிடமும் விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது. மணிகண்டனுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில்தான் அவரது மனைவி காவல் துறையை அணுகி உள்ளார்.

மணிகண்டன் மனைவி
மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர். எனவே ராமநாதபுரம் போலீஸ் எஸ்பியை, மணிகண்டன் மனைவி நேரில் சந்தித்து நடிகை சாந்தினி மீது புகார் அளித்துள்ளார். மணிகண்டன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானது எனது குடும்பம் மற்றும் கணவர் மீது சாந்தினி அவதூறு பரப்புகிறார், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது, எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் மணிகண்டன் மனைவி தெரிவித்துள்ளார்.

அடையாறு காவல்துறை
இந்த புகாரை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் காவல்துறையினர், அதை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை அவர்களிடம் இருப்பதால் இந்த புகாரையும் சேர்த்து விசாரிக்குமாறு ராமநாதபுரம் எஸ்.பி. பரிந்துரைத்துள்ளார்.

சப்போர்ட்டுக்கு வந்த மனைவி
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றம்சாட்டும் வகையில், புகைப்படங்கள், சாட்டிங் உள்ளிட்ட பிற விவரங்களை சாந்தினி வெளியிட்டு இருந்தாலும் அவரது மனைவி தனது கணவர் குற்றமற்றவர் என்று தெரிவித்து காவல்துறையை அணுகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிகண்டனும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது மீடியாக்கள் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Click it and Unblock the Notifications
