Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர் விசுவாசி! ஜெயலலிதாவின் Election Schedule specialist! யார் இந்த செங்கோட்டையன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை அவரது அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அதிமுக சார்பில் 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

sengottaiyan dmk tvk

முதல்முறையாக 1977ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். செங்கோட்டையன் வனத்துறை, போக்குவரத்துத் துறை, விவசாயத் துறை, தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி என பல்வேறு துறையின் அமைச்சராக இருந்தவர்.

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது கட்சியின் பொருளாளராக இருந்தார். 1988 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு திட்டங்களை வகுத்துத் தந்தவர் என்ற பெருமை செங்கோட்டையனை சேரும்.

ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்நிலை குழுவில் இருந்த போது அவரை காங்கேயம் வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது முதல் ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை விசுவாசியாகவே இருந்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த வரை எந்த தேர்தல் என்றாலும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டார்.

முதல் நாள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்துவிட்டு அடுத்த நாள் ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது என அனைத்தையும் நள்ளிரவு வரை ஆய்வு செய்து ஒரு ஒத்திகை நடத்தி அது திருப்தி அளித்த பிறகே தூங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனாலேயே ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஒப்படைத்திருந்தார்.

செங்கோட்டையன் கட்சி பதவிகளில் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு செங்கோட்டையனின் அமைச்சர் பதவியை அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெயலலிதா பறித்தார். ஆனாலும் செங்கோட்டையன், ஜெயலலிதாவிடம் தனது விசுவாசத்தை கைவிடவே இல்லை.

ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியை கைப்பற்ற பலர் முயன்ற போதும் செங்கோட்டையன் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ஆனார்.

அவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். மேலும் தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்ததால் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பு என்ற கருத்தை முன் வைத்தார். இதனால் தனது கட்சி பதவியை இழந்த அவர், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை பொது நிகழ்ச்சியில் நேரில் பார்த்த போது அவர்களுடன் பேசியதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செங்கோட்டையன் வகித்து வந்த பதவிகளை பார்க்கலாம்.

19720 அதிமுக தொடங்கப்பட்ட போது உறுப்பினரானார்.

1975- கோவை பொதுக்குழு மாநாட்டை நடத்தி எம்.ஜி.ஆரின் பாராட்டை பெற்றார்

1977- சத்தியமங்கலம் தொகுதியில் வென்று முதல் முறையாக சட்டசபைக்குச் சென்றார்.

1980- ஆம் ஆண்டு முதல் 9 தேர்தல்களில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டார்

1989-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்ததும் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1996 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் செங்கோட்டையன் தோல்வி

1991- 1996- போக்குவரத்துத் துறை, வனத்துறை அமைச்சரானார்

2011- 2012- விவசாயத் துறை , தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை அமைச்சர்

2016- 2021 - எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார்.

செப்.6, 2025- செங்கோட்டையனின் பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி

அக்.30- அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்

நவ.26- சட்டசபை பதவியை ராஜினாமா செய்தார்

நவ.27- தவெகவில் ஐக்கியம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+