'அது மிருகத்தனமான படுகொலை' கோகுல்ராஜ் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்கும் பாடம் - பாலபாரதி
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்பைப் பலரும் வரவேற்று வரும் சூழலில், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி நீதிமன்றத்தின் இந்த தீர்பை வரவேற்றுள்ளார்
கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேருக்கு இன்று தண்டனையை நீதிமன்றம் இன்று அறிவித்தது.

3 ஆயுள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு குற்றவாளிகளான யுவராஜ், அவரது கார் டிரைவர் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் சாகும் வரை இருவரும் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்ற 8 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என 5 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலபாரதி
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக பாலபாரதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாலபாரதி மேலும் கூறுகையில், "இந்த தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. நம்முடைய தமிழ் சமூக அமைப்பில், சாதி ஆதிக்கம் காரணமாக நடந்துள்ள மிருகத்தனமான படுகொலையாக இது கருதப்படுகிறது.

கோகுல்ராஜ் கொலை
கோகுல்ராஜ் மிக கொடூரமான முறையில் சித்தரவதைச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டை வழங்கப்பட்டது. இது ஒருவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்பதை தாண்டி, இது போன்ற விஷங்களில் எப்படிக் கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பாடமாக அமைந்துள்ளது.

உரிய நடவடிக்கை தேவை
இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டப் போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத் தமிழக அரசுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்தத் தீர்பு அமைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video

என்ன நடந்தது
ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாகப் பழகினர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ் இரவு வீடு திரும்பவில்லை. அப்போது தான் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications