'டைட்டன்' விபத்து! அன்றே கணித்த ஓஷன்கேட் நிறுவன அதிகாரி.. சொன்னது பலித்தது!
சென்னை: நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் கோர விபத்தில் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த விபத்திற்கு காரணமாக 'டைட்டன்' எனும் சிறிய வகை நீர்மூழ்கி கப்பல் பாதுகாப்பானது கிடையாது என்று கடந்த 2018ல் சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது தற்போது மீண்டும் நினைவு கூறப்படுகிறது.
இந்த டைட்டன் கப்பலை OceanGate Expeditions எனும் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு வடிவமைத்துள்ளது. இந்த கப்பல் கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் அதிக அளவு அழுத்தத்தை தாங்கும் என்று நிறுவனம் கூறியது. அதாவது இந்த கப்பல் கடலுக்கு ஆழத்தில் சுமார் 4 கி.மீ (4,000 மீ) வரை பயணிக்கும் என்று சொல்லப்பட்டது. இங்குதான் சிக்கல் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் மனிதர்கள் பயணிப்பதை போல கடலுக்குள் இப்படி சாதாரணமாக பயணித்துவிட முடியாது.

ஏனெனில், கடலில் அழுத்தம் அதிகரிக்கும். புரியும்படி சொல்வதெனில் ஒரு காலி இரும்பு கேன் எடுத்துக்கொள்வோம். அதில் கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றிவிட்டு மூடியை கொண்டு டைட்டாக மூடிவிட்டால் அதில் காற்று போக முடியாது. இப்போது இந்த கேன் உள்ளே ஒருவித அழுத்தம் உருவாகும். வெளியில் இருக்கும் அழுத்தத்துடன் இணைந்து இயல்பு நிலைக்கு அது திரும்ப முயற்சிக்கும். நீருக்கு மேல் இருப்பதால் இந்த அழுத்தம் காரணமாக கேன் அப்படியே நசுங்கி விடும்.
இதே தண்ணீருக்கு அடியில் இருந்தால் நிலைமையே வேற. இந்த கேன் உடைந்து சிதறிவிடும். இதைத்தான் catastrophic implosion என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது டைட்டன் நீர் மூழ்கி கப்பலிலும் இதுதான் ஏற்பட்டுள்ளது. எனவே இதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். என்னதான் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்றிருந்தாலும் 40 அடி ஆழம் வரைதான் எவ்வித பாதுகாப்பு உடைகள் இன்றி மனிதர்களால் போக முடியும். அதற்கும் கீழே போக வேண்டும் எனில் ஸ்கூபா எனப்படும் ஸ்பெஷல் உடையை அணிந்திருக்க வேண்டும்.
இந்த உடை, ஆழ்கடலில் ஏற்படும் அழுத்தத்தை ஓரளவு நம்மை பாதிக்காமல் தடுக்கும். அப்படியே இந்த ஸ்கூபா கியர் எனப்படும் சிறப்பு உடை அணிந்து இருந்தாலும் 2,000 மீட்டர் வரைதான் போக முடியும். ஆனால் டைட்டன் வெடித்து சிதறியது 1,600 அடி ஆழத்தில். அப்படியெனில் இந்த சம்பவம் நடந்த உடனேயே 5 பேரும் உயிரிழந்திருப்பார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், 2018 ஆம் ஆண்டில், OceanGate Expeditions-ன் கடல் நடவடிக்கைகளின் இயக்குநரான டேவிட் லோக்ரிட்ஜ், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதாவது இந்க நீர்மூழ்கி கப்பல் வெறும் 1,300 மீட்டர் வரை மட்டுமே செல்லும், அதேபோல இத முழுமையான பாதுகாப்பானது அல்ல என்று கூறியிருந்தார்.
ஆழ்கடலில் உள்ள டைட்டானிக் கப்பலை சென்றடைய வேண்டும் எனில் இந்த ஆழத்தை விட மூன்று மடங்கு அதிகமான ஆழத்திற்கு போக வேண்டும்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த டைட்டன் விபத்தை ஏற்கெனவே டேவிட் லோக்ரிட்ஜ் ஒரு வகையில் முன்கூட்டியே கணித்திருக்கிறார். இருப்பினும் இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்தால் அவருக்கும் நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எனவே அவர் தனது வேலை அப்போதே ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications