முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.
Recommended Video
சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945-ம் ஆண்டு பிறந்தவர். 1970களில் ராணுவத்தில் பணிபுரிந்தார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றார்.

பின்னர் 1990களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.
1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் சார்பாக திருச்சி லோக்சபா தொகுதியில் 2001-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் தலித் எழில்மலை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் எழில் கரோலின், தலித் எழில்மலையின் மகளாவார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தலித் எழில்மலை உயிர் பிரிந்தது. அவரது உடல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எழில் கரோலின்
எழில் கரோலின் தன் தந்தை மறைவு குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
என் அப்பா.... எங்களை விட்டு மறைந்தார்..... மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை எங்களை விட்டு பிரிந்தார்.... அப்பா..... அப்பா....#Condolence #RIPDalitEzhilMalai pic.twitter.com/4khkgjpB0U
— Ezhil Caroline (@CarolineEzhil) May 6, 2020
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல்:
முன்னாள் மத்திய இணையமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்திய ராணுவத்தில் சிறந்த சேவையாற்றியவர் என்ற பதக்கம் பெற்று, அரசியலுக்கு வந்து சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 6, 2020
முன்னாள் மத்திய இணையமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்திய ராணுவத்தில் சிறந்த சேவையாற்றியவர் என்ற பதக்கம் பெற்று, அரசியலுக்கு வந்து சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.
அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் மீது மிகுந்த பற்று கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தலித் எழில்மலை அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
சீட் ஒதுக்கப்பட்ட பிறகு அப்செட்.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்? புரட்சி பாரதம் இன்று முடிவு! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications