TR Balu Wife: முன்னாள் மத்திய அமைச்சர், டிஆர் பாலு மனைவி காலமானார்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மனைவியும், (TR Balu Wife) தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார். அவருக்கு வயது 79. உடலநலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரேணுகா தேவி இன்று உயிரிழந்தார். இன்று சென்னையில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலுவின் மனைவி ரேணுகா தேவி. இவருக்கு வயது 79. தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் ஆவார். ரேணுகா தேவிக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கடந்த 2 வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ரேணுகா தேவியின் மறைவு செய்தி அறிந்து, திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலையில் ரேணுகா தேவியில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ரேணுகா தேவியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலில் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகாதேவி பாலு அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி ரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அவர் கூறுகையில், "முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசன், அன்புமணி இரங்கல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ரேணுகா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோன்று டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
திரு. டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு திரு. டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications