சத்தியமா அரசுப் பள்ளிகள்தான்.. நம்புங்க.. முதலமைச்சர் ஸ்டாலின் செம வைப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வித் துறையில் சத்தம் இல்லாமல் ஒரு சமுக புரட்சியைச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைச் சர்வதேச கல்விநிறுவனத்திற்குச் சவால் விடும் அளவுக்கு மாடர்ன் ஆக மாறி தந்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய பிள்ளைகள் கோடை விடுமுறையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் நேரத்தில் நிச்சயம் மிரண்டு போய் விடுவார்கள்.

 four government schools in Chennai have been upgraded to international standards

நம்ம பள்ளியா இது? நாம் போன வருடம் ஆடித் திருந்த அழுக்கு கட்டங்களா இவை? சுண்ணாம்பு பூசாமல் கருப்பாகக் காட்சியளித்த வகுப்பறைகளா இவை ? என வாய்ப்பைப் பிளந்து நிற்கப் போகிறார்கள்.

அந்தளவுக்கு கார்பரேட் கல்வி நிறுவனங்களைப் போலச் சென்னையில் உள்ள 4 அரசுப் பள்ளிகள் புதிய பொலிவைப் பெற்றுள்ளன. City Investments to Innovate, Integrate and Sustain project மூலம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சமீபத்தில் இந்தப் பள்ளிகள் அனைத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். ஆக மொத்தம் இந்த 4 பள்ளிகளும் சுமார் ரூ.12.99 கோடியில் புதியதாகக் கட்டித்தரப்பட்டுள்ளன. இதில் முன்பே பயன்பாட்டிலிருந்த சில கட்டடங்கள் புனரமைக்கப்பட்டும் உள்ளன.

 four government schools in Chennai have been upgraded to international standards

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சர்மா நகரைச் சேர்ந்த சென்னை உயர்நிலைப் பள்ளியும் சென்னை தொடக்கப் பள்ளியும் 2 கோடியே 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தப் பள்ளியின் நுழைவாயிலின் தோற்றம் ஒரு இண்டர்நேஷனல் ஸ்கூல் எனச் சொல்லும் அளவுக்காக நவீன கட்டுமானத்தைப் பெற்றுள்ளது. தரமான முகப்பு கூரை அமைக்கப்பட்டு இரு பக்கமும் கலைநயமிக்க அழகிய வடிவத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

 four government schools in Chennai have been upgraded to international standards

வெளியிலிருந்து பார்க்கும் பெற்றோர்கள், இத்தனை ஆண்டுகாலமாக நம் பகுதியிலிருந்த அரசாங்க பள்ளிக்கூடம்தானா இது என வியப்பில் ஆழ்ந்து நிற்கிறார்கள். அதேபோல் பள்ளியின் உள்ளாக இருக்கும் அனைத்து கட்டடங்களிலும் கலர் கலர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தரமான ஜன்னல் கம்பிகள் போட்டு விதவிதமான வண்ணங்களால் ஒளிர்கின்றன. கண்களை உறுத்தாதபடி பூச்சு நிறங்களைத் தேர்ந்தெடுத்து அடித்திருக்கிறார்கள். ஆகவே இந்தக் காட்சியைப் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளது.

 four government schools in Chennai have been upgraded to international standards

இப்பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தும் ஏதோ விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் தரத்தில் பளபளக்கின்றன. மிகச் சிறப்பான கதவுகள் அமைத்து, அதற்கு ஏற்ப வண்ணங்கள் பூசி உள்ளனர். வாஷ் பேஷன் முதல் தரையில் போடப்பட்டுள்ள டைல் வரை எல்லாம் செம லுக். அந்தளவுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளனர்.

மேற்கொண்டு பள்ளியின் மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில், பள்ளிக் கட்டடங்களின் மேல் பகுதியில் சோலார் பேணல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை இந்தப் பள்ளியே உற்பத்தி செய்து கொள்கிறது.

 four government schools in Chennai have been upgraded to international standards

"எங்கள் பள்ளியைப் புதுப்பித்துக் கொடுத்த பிறகு பொதுமக்கள் பலர் உள்ளே வந்து என்னிடம், 'இந்த என்டரன்ஸ் ஏதோ இண்டர்நேஷனல் ஸ்கூல் போல இருக்கிறது' என்று வியந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். எனக்கும் கூட இதுவரை நம்ம பள்ளிக்கூடம்தானா இது? என்ற வியப்பு இதுவரை அடக்கவில்லை. ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன்.

எங்கள் பள்ளியில் உள்ள எல்லா வகுப்பறைகளையும் 'ஹேப்பி க்ளாஸ் ரூம்ஸ்' ஆக மாற்றிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் வீட்டுக் குழந்தைகளுக்கு அவர் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருவாரோ, அதே அளவுக்கு அக்கரை எடுத்துச் செய்திருக்கிறார். என் வாழ்நாளில் ஒரு அரசுப் பள்ளி இந்தளவுக்கு மாறும் எனக் கனவில் கூட நான் நினைத்ததில்லை.

 four government schools in Chennai have been upgraded to international standards

அதை நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன். வகுப்பறைக்குள் உள்ள வரும்போதே ஒரு உற்சாகம் வருகிறது.

குழந்தைகள் இதை அதிகம் விரும்புகிறார்கள். பள்ளியின் தரம் என் கண்முன்னாலேயே உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் புதிய மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது" என்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது வெறும் கட்டட மாற்றம் மற்றும் இல்லை. முன்புபோல இல்லை வகுப்பறைகள். தொலைக்காட்சி, புராஜெக்டர் என நவீனக்காலத்திற்கு ஏற்ப வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல ஆர்.ஒ முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 4 பள்ளிகளிலும் உள்ள விளையாட்டு மைதானம் முழுக்க சர்வதேச தோற்றத்தில் மிளிர்கின்றன.

இந்தத் தண்டையார்பேட்டை பள்ளியைப் போலவே இராயபுரம் கல்லறை சாலை மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியும் சென்னை தொடக்கப்பள்ளியும் மாபெரும் மாற்றத்தை அடைந்துள்ளன. இதற்காக 4 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

 four government schools in Chennai have been upgraded to international standards

"நிறைய வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே நிறைய மாணவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதன் தரம் இந்தப் பகுதி மக்களை அசந்துபோகச் செய்திருக்கிறது" என்கிறார் மணிகண்டன் தெரு பள்ளியின் ஆசிரியர்

அண்ணாநகர்- செனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளியும் 4 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அடையாறு காந்திகிராமம், சென்னை நடுநிலைப்பள்ளி 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் புதிய வாழ்வைப் பெற்றுள்ளது.

 four government schools in Chennai have been upgraded to international standards

வெறும் கட்டியங்களை மட்டும் நவீன மயமாக்கினால் போதாது இல்லையா? அதை உணர்ந்த சென்னை மேயர் பிரியா ராஜன் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த அளவில் மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவ செல்வங்களை அழைத்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நவீன கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல், 'விங்ஸ் டு ஃப்ளை' திட்டம் மூலம் சென்னை அரசுப் பள்ளி பிள்ளைகளை 9 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அழைத்து பயணம் அழைத்துச் செல்லும்விதமாக துபாய்க்குக் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்றால் சும்மாவா?

 four government schools in Chennai have been upgraded to international standards

'கல்வியில் சென்னை' புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 four government schools in Chennai have been upgraded to international standards
 four government schools in Chennai have been upgraded to international standards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+