சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்.. 28-இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு கணிசமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் பெற்று கொண்டு ஊசி போடுகிறது.

Free Corona vaccine will be given in Private hospitals in TN

இந்த நிலையில் பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தை சென்னையில் வரும் 28ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை- கோவை என இரு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Free Corona vaccine will be given in Private hospitals in TN. This will be inaugurated by CM MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X