சென்னையில் இன்னைக்கு ஐபிஎல் மேட்ச் பார்க்க போறீங்களா! மெட்ரோவில் இலவச பயணம்!
சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இதை பார்க்க செல்பவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காணவரும் ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில், போட்டிக்கான டிக்கெட்டுடன் க்யூ-ஆா் குறியீட்டுடன் கூடிய மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கக் கூடிய பயணச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீட்டை பயன்படுத்தி, எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம். இச்சிறப்பு சலுகை ஒரு சுற்றுப்பயணத்துக்கு (2 நுழைவு, 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
அரசினா் தோட்டம் - விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரயில் அரசினா் தோட்டத்திலிருந்து சனிக்கிழமை இரவு 11.27-க்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும்.
பச்சை வழித்தடத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் கடைசி இணைப்பு ரயில் இரவு 11.59-க்கும், அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் கடைசி இணைப்பு ரயில் இரவு 11.44-க்கும் புறப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications