இலவச மெட்ரோ சென்னையில்.. இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? கையில் இது இருந்தா போதுமே.. 1 மணி வரை சர்ப்ரைஸ்
சென்னை : சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் காணச் செல்லும் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. இன்றைய போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்பதே அந்த அறிவிப்பு. இதற்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட சிறப்புத் திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று ஏப்ரல் 14ம் தேதி இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் விறுவிறுப்பான லீக் போட்டி நடைபெற உள்ளது.

யாரெல்லாம் இலவசமாகப் பயணிக்கலாம்
இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமான ஒரிஜினல் பயணச்சீட்டை கையில் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரசிகர்கள் தங்களின் ஐபிஎல் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் காட்டி ஸ்கேன் செய்து உள்ளே நுழையலாம்.
இந்த இலவசப் பயணச் சலுகையானது ஒரு முழுமையான சுற்றுப் பயணத்திற்கு, அதாவது ஒருமுறை மைதானத்திற்குச் செல்லவும், போட்டி முடிந்த பிறகு அங்கிருந்து திரும்பவும் என மொத்தம் இரண்டு முறை நுழைந்து வெளியேற (2 Entry & 2 Exit) அனுமதிக்கப்படும்.
இதுதான் ரூட்
சென்னையின் எந்தப் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் ரசிகர்கள் ரயிலில் ஏறி, போட்டி நடைபெறும் இடத்திற்கு மிக அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றடையலாம். அங்கிருந்து மைதானத்திற்கு எளிதாகச் சென்று விட முடியும்.
வழக்கமாக மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்படும். ஆனால், ஐபிஎல் போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்புவதற்குத் தாமதமாகும் என்பதால், சிறப்பு ஏற்பாடாக நள்ளிரவு 1 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை நோக்கியும் மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையம் நோக்கியும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு 1 மணிக்குத் தான் புறப்படும்.
நள்ளிரவு வரை சிறப்பு ரயில் சேவை
நீல வழித்தடத்தில் (Line 1) பயணிப்பவர்கள் நேரடியாக அரசினர் தோட்டம் நிலையத்திற்கு வந்துவிடலாம். ஆனால், பச்சை வழித்தடத்தில் (Line 2) உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி தங்களது வழித்தடத்தை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம்.
இந்த வசதியினால் ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியாகப் போட்டியை ரசிக்கச் செல்ல முடியும். ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஏசி ரயிலில் சொகுசாகப் பயணிக்கக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு சென்னை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications