தமிழக வளர்ச்சிக்கு ”இலவசங்கள்” மிகமுக்கியக் காரணம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
சென்னை: மக்களின் அவசியத் தேவைகளை அவசியம் உணர்ந்து அரசு இலவசமாக வழங்கியது தான் தமிழக வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மாணவ, மாணவியர்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருகிறோம். மிதிவண்டியின் தரத்தில் அரசு சார்பாக எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக வந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கொரோனா என்பது உலகளாவிய பிரச்னை. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இதே நிலை தொடர வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் வேகமாக செலுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல் செப்டம்பர் மாத இறுதியுடன் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இதனால் மக்கள் அனைவரும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து இலவசம் வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இலவசங்கள் யாருக்கு வழங்க வேண்டும், யாருக்கு வழங்க கூடாது என்பது ஒருபக்கம் இருக்கிறது. அதேபோல் எது இலவசம், எது அவசியம் என்பதும் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அவசியங்களை தான் இலவசமாக வழங்கி வருகிறது.
மாணவர்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க இலவச மிதிவண்டிகளை வழங்குகிறது. இன்று தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளிலும் முதலிடத்தில் இருக்க காரணம், மக்களின் அவசிய தேவைகளை அவசியம் உணர்ந்து தமிழக அரசு இலவசமாக வழங்கியது தான் என்று தெரிவித்தார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications