சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்தே விளையாடுறோம்! புரோட்டா காமெடி செய்யும் பிரான்ஸ் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : மிகுந்த எதிர்பார்ப்புகள் பரபரப்பு விறுவிறுப்புகளுக்கு பஞ்சாமில்லாமல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்து முடிந்ததோடு, அர்ஜென்டினா வெற்றிக் கோப்பையோடு கிட்டத்தட்ட கொண்டாட்டங்களை முடித்தேவிட்ட நிலையில், இறுதி போட்டியை மீண்டும் நடத்த வேண்டுமென பிரான்ஸ் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

22 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த 20ஆம் தேதி கத்தாரில் ஆரவாரமாக தொடங்கி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டன.

இறுதியில் நேற்று முன் தினம் இரவு இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினாவும் மல்லு கட்டின. இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர்.

வடக்கே வதைக்கும் குளிர்- கண்டெய்னர்களில் ஹீட்டர்கள்- ராகுல் யாத்திரைக்கு ஒரு வாரம் ரெஸ்ட் வடக்கே வதைக்கும் குளிர்- கண்டெய்னர்களில் ஹீட்டர்கள்- ராகுல் யாத்திரைக்கு ஒரு வாரம் ரெஸ்ட்

மெஸ்ஸி

மெஸ்ஸி

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அர்ஜென்டினாவே களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஐந்தாவது நிமிடத்தில் இருந்தே அந்த அணியின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் 21வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் அடித்தார். அந்த பெனால்டி வாய்ப்பை பார்ப்பதற்கும் காண கண் கோடி வேண்டும். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவில் இரண்டாவது கோல் விழுந்தது. மெஸ்ஸி ஜூலியன் உள்ளிட்டோர் மிக அருமையாக விளையாடி அந்த கோலை போட்டனர்.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

முதல் பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா இரண்டாவது பாதையிலும் கடும் போட்டி கொடுத்தது. ஆனால் 80வது நிமிடத்தில் திடீரென பிரான்ஸ் அணியின் கை ஓங்கியது. கச்சிதமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்மாப்பே கோலாக மாற்றினார். அடுத்த 90 வினாடிகளில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் இரண்டுக்கு இரண்டு என்ன சமநிலை அடைந்தது. தொடர்ந்து எக்ஸ்ட்ரா டைமிலும் தல ஒரு கோல் அடிக்கப்பட்டது. இதை அடுத்து பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜென்டினா கோப்பையை வென்றது.

பிரான்ஸ் கண்டனம்

பிரான்ஸ் கண்டனம்

கோப்பையை வென்ற உற்சாகத்தில் அந்நாட்டு வீரர்கள் தலைகால் புரியாமல் இருக்கிறார்கள். கோப்பையுடனேயே மெஸ்ஸி தூங்குவது, லட்சக்கணக்கானோருக்கு மத்தியில் ஊர்வலம் செல்வது, பிரான்ஸ் வீரர் எம்மாப்பேவை வெறுப்பேற்றுவது என அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியதோடு, கிட்டத்தட்ட ரெஸ்ட் எடுக்கச் சென்று விட்டனர். இந்நிலையில் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு பல சாதகமான முடிவுகள் தவறாக வழங்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அந்த அணி கோப்பையை வென்றதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

இதனால் இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டுமென பிரான்ஸ் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அர்ஜென்டினா கோப்பையை வெல்வதற்கு 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பே முக்கிய காரணியாக இருந்தது. அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அப்போதே ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் மெஸ்ஸியின் இரண்டாவது கோல் மற்றும் டி மரியாவின் கோல் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என இணையதளத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றனர்.

விசாரணை

விசாரணை

கிட்டத்தட்ட அர்ஜென்டினாவின் இரண்டு கோல்களுக்கு எதிராக இரண்டு லட்சம் பேரும் நடுவர்களின் தவறு என மேலும் சுமார் 2 லட்சம் பேரிடமும் கையெழுத்து பெற்றிருக்கின்றனர். என்னதான் கையெழுத்து பெற்றாலும் மீண்டும் இறுதிப் போட்டிகள் நடத்த வாய்ப்பு இல்லை என்கின்றனர் விளையாட்டு நிபுணர்கள். இதனால் இந்த விவகாரம் பெரிதாக எடுபடவில்லை அதே நேரத்தில் கோப்பையை பெற்ற போதும், வெற்றி கொண்டாட்டங்களின் போதும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவை கிண்டல் செய்த அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ்க்கு எதிராக விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

English summary
The FIFA World Cup football series has ended with much fanfare and with Argentina winning the trophy, French fans have raised the war flag for a replay of the final.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X