சீமான் திமிற.. அதிமுக குமுற.. ஸ்டாலின், அண்ணாமலை ஆப்சென்ட்.. 24 மணி நேரத்தில் ஆடிப்போயிட்டாங்களே!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு மோதல்கள், மாற்றங்கள் நடந்து உள்ளன. சில விஷயங்கள் தமிழ்நாடு அரசியலை உலுக்கும் அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளன. அவை என்னென்ன சம்பவங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
சம்பவம் 1 : நேற்று முதல்நாள் பாஜக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக பேசியது நேற்று பெரிய சர்ச்சையானது. பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , காலில் விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னைப் பற்றிப்பேச எடப்பாடி பழனிசாமி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எழுதி வச்சிக்கோங்க.. பா.ஜ.கவுக்கும் தி.மு.கவுக்கும் எக்காலத்திலும் உறவு இருக்காது".. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பா.ஜ.கவுக்கு எதிரிகள் தான். எடப்பாடி போல தற்குறி இல்லை நான், என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

இதில் அவர் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையாகவே அதிமுகவினர் இதற்கு எதிராக கடுமையாக போராட தொடங்கினர். அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு தொடங்கி.. அவருக்கு எதிராக மாஜி அமைச்சர்களின் காட்டமான பேட்டி என்று மொத்தமாக நிலைமை கைமீறி போனது.
சம்பவம் 2: நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து கூறினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அதை ஏற்க முடியாது. அண்ணாமலை போல ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிக்குத் தலைவராக வரவில்லை எடப்பாடி பழனிசாமி. அவர் அதிமுக அடிப்படை உறுப்பினராக இருந்து, படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியை விட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர்.. தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை கொடுத்தவர்.
இப்போது இருப்பவர்களில் இபிஎஸ்தான் புத்திசாலி" இப்போது இருக்கிறவர்களிலேயே எடப்பாடி பழனிசாமிதான் புத்திசாலி; தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி அண்ணாமலை பேசக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடப்பாடிக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.
சம்பவம் 3: ரஜினி பதிலடி, விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஏர்போர்ட் வந்த நடிகர் ரஜினியிடம், செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை, அவரின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.. இதற்கு ரஜினி ஒரே வரியில், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார். அதோடு துரைமுருகன் தன்னை விமர்சனம் செய்ததை.. அவர் என் நண்பர்.. இதை நான் தவறாக எடுக்கவில்லை என்று கூறி கடந்தும் சென்றுள்ளார்.
சம்பவம் 4: முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்வதால்.. அமைச்சரவை மாற்றம் இல்லை. அதனால் நேற்று அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவில்லை. இன்று முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் 5: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அண்ணாமலை வெளிநாட்டில் இருப்பதால் கட்சி நடத்த ஆள் தேவை.. கட்சியை வழிகாட்ட வேண்டும். 3 மாதங்கள் தலைவர் இல்லாமல் இருக்க முடியாது.. இதனால் ஒருவரை தற்காலிகமாக களமிறக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக களமிறக்க வேண்டும் என்று டெல்லி நினைக்கிறதாம். ஆனால் அதே சமயம் அண்ணாமலை மீதும் டெல்லிக்கு நன்மதிப்பு உள்ளது. இதற்கு இடையில் தான் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார் .












Click it and Unblock the Notifications