Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிண்டர் + பிறப்பு சான்றிதழ் + ரயில்கள்.. இந்த மாசத்தோடு இதெல்லாம் மொத்தமாக மாறுது.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான பல சேவைகள் நேற்றோடு மாற்றம் அடைந்துள்ளன. அந்த சேவைகள் என்னென்ன என்று இங்கு வரிசையாக பார்க்கலாம்.

மாற்றம் 1: நேற்று முதல் 182 ரயில்களின் நேரத்தை மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. புறப்படும் நேரம், இடையில் நிற்கும் நேரம், சென்றடையும் நேரம், மொத்த பயண காலம் மாற்றப்படும்.

From Birth certificates to Train timings: What are the 4 things that changed completely from this month

புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தென்னக ரயில்வேயில் பின்வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது,

  • கொல்லம் ஜங்க்சன். சென்னை எழும்பூர்
  • டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருப்பதி
  • கோவை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
  • பாண்டிச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
  • பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • பாண்டிச்சேரி- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
  • பாண்டிச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் (திரை-வாரம்)
  • விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • பாண்டிச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
  • விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • கோயம்புத்தூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
  • விழுப்புரம்-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • பாண்டிச்சேரி- புது டெல்லி எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
  • எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்-
  • மதுரை-புன்னலூர் எக்ஸ்பிரஸ்
  • புன்னலூர்-மதுரை எக்ஸ்பிரஸ்
  • டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் ஜே.என்
  • தாதர் - திருநெல்வேலி
  • தாதர் - திருநெல்வேலி
  • பாலக்காடு-திருச்செந்தூர்
  • திருச்செந்தூர்- பாலக்காடு
  • மதுரை- திருவனந்தபுரம்
  • கோவை ஜே.என்-மதுரை
  • மதுரை-கோவை
  • ஈரோடு-திருநெல்வேலி
  • காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (தினசரி)
  • கோவை ஜே.நிஜாமுதீன்
  • எர்ணாகுளம்-திருவந்தபுரம்
  • மங்களூர் - திருவனந்தபுரம்
  • குருவாயூர்-திருவந்தபுரம்
  • புனே-கன்னியாகுமரி

மேற்கண்ட ரயில்கள் 10 - 60 நிமிடம் வரை இனி தாமதமாக புறப்படும். நிர்வாக காரணங்கள், வந்தே பாரத் ரயிலை இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு அது புறப்படும், செல்லும் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.

மாற்றம் 2: நேற்று முதல் இந்தியாவில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை .ரூ.203 உயர்த்தப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 918க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,118.50-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில்தான் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

மாற்றம் 3: நேற்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த மாற்றம் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது குடிநீர் வரி அளிப்பதற்கு பணிமனை அலுவலகங்களில் தனி அறைகள் செயல்பட்டு வருகின்றன. நமக்கு வர கூடிய குடிநீர் வரி அளவில் பொறுத்து நேரடியாக சென்று இந்த அலுவலகங்களில் கட்டணம் செலுத்த முடியும்.

இந்த நிலையில்தான் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. முன்பெல்லாம் இங்கே வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டும். இதை தடுக்கும் விதமாக : இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வகைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மாற்றம் 4: நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, நேற்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. நேற்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும்.

ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+