பிரிட்டிஷ் சூட்கேஸ் டூ டிஜிட்டல் இந்தியா: பட்ஜெட் வரலாற்றையே மாற்றிய நிர்மலா சீதாராமனின் 9 சாதனைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1ம் தேதி தனது 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.. இதன் மூலம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைக்கிறார்... அதுமட்டுமல்ல, நிதியமைச்சராக பல்வேறு சாதனைகளையும் நிர்மலா சீதாராமன் புரிந்துள்ளார்.. அவைகளை பற்றி இங்கே பார்ப்போம்..

1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்ததில் தொடங்கி இன்று வரை பல நிதியமைச்சர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.. ஆனால், ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற மகத்தான வரலாற்றுச் சாதனையை நிர்மலா சீதாராமன் இன்று எட்டுகிறார்.

Nirmala Sitharaman 9th Budget 2026 Budget 2026 Finance Minister

இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது.

நிர்மலாவின் சாதனைகள்

எனினும், அவர் 1959-1964 மற்றும் 1967-1969 என வெவ்வேறு காலகட்டங்களிலேயே அந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு அடுத்து ப.சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், அவர்கள் யாரும் நிர்மலா சீதாராமனை போலத் தொடர்ச்சியாக ஒரே ஆட்சியின் கீழ் இந்த மைல்கல்லை தொட்டதில்லை.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபோது, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.

கடந்த 1970-களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிதித்துறையைத் தனது கூடுதல் பொறுப்பாக கவனித்து பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற வரலாற்றை படைத்தார்.

நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை

ஆனால், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முழுநேரப் பொறுப்புடன் நிதித்துறையை வழிநடத்தும் நிர்மலா சீதாராமன், கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 முழுமையான பட்ஜெட்கள், 1 இடைக்கால பட்ஜெட் மற்றும் 1 ஜூலை பட்ஜெட் என மொத்தம் 8 பட்ஜெட்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்... அந்தவகையில், இன்று அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் அவரை இந்திய பொருளாதார வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாற்றியுள்ளது.

நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் என்பது வெறும் எண்ணிக்கையிலான சாதனைகளை மட்டுமல்லாமல், பட்ஜெட் நடைமுறையில் பல நவீன மற்றும் கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வந்த காலமாகவும் பார்க்கப்படுகிறது...

லெதர் சூர்கேஸ் - சிவப்பு துணி

2019ல் தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோதே, பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வந்த பிரிட்டிஷ் காலத்து "லெதர் சூட்கேஸ்" முறையை அவர் அதிரடியாக ஒழித்தார். அதற்கு பதிலாக இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சிவப்பு துணியால் சுற்றப்பட்ட "பகி-காதா" எனப்படும் கணக்கு புத்தக முறையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்து உலகையே வியக்க வைத்தார்.

நிர்வாக ரீதியாகவும் நிர்மலா எடுத்த பல துணிச்சலான முடிவுகளையும் இங்கு நாம் சொல்லியாக வேண்டி உள்ளது.. கடந்த 2021ல் கொரோனா தொற்று சவால்களுக்கு மத்தியிலும், காகித பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை அவர் அறிமுகம் செய்தார்.

"மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் மூலம் அவர் பட்ஜெட்டை வாசித்தது, நவீன இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை பறைசாற்றும் அடையாளமாக அமைந்தது.

சுவாரஸ்யமான சாதனைகள்

அதேபோல அவரது பட்ஜெட் உரைகளும் சுவாரஸ்யமான பல சாதனைகளை கொண்டுள்ளன.. எப்படி தெரியுமா?

கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றி, இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். அந்த உரையில் புதிய வருமான வரி முறை மற்றும் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வது போன்ற பல முக்கியமான பொருளாதார மாற்றங்களை அவர் அறிவித்தார்.

அதே சமயம், 2024ல் இடைக்கால பட்ஜெட்டின்போது வெறும் 56 நிமிடங்கள் மட்டுமே பேசி தனது மிகக் குறுகிய உரையை அவர் வழங்கினார். இப்படியெல்லாம் வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன், இன்று தன்னுடைய 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிலையில், அதில் இடம்பெறப்போகும் புதிய அறிவிப்புகளை ஒட்டுமொத்த நாடும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து கொண்டிருக்கிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+