மகளிர் உரிமை தொகை மாறுது! வருமான வரி மாறுது! இந்த மாதம் முதல் மாறிய முக்கிய விஷயங்கள்! நோட் பண்ணுங்க
சென்னை: இன்று ஜூலை மாதம் பிறந்த நிலையில் இந்த மாதம் முதல் பல்வேறு முக்கியமான விஷயங்கள் மாற உள்ளன. மகளிர் உரிமைத்தொகை தொடங்கி வருமான வரி வரை பல முக்கியமான விஷயங்களில் மாற்றங்கள் வர உள்ளன.
2024 ஜூலை மாதம் முழுக்க நடக்க போகும் பல்வேறு மாற்றங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம் .

வருமான வரி: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். இருப்பினும், வரி செலுத்துவோர் இறுதித் தருணம் வரை தாமதிக்கக் கூடாது. ITR ஐ முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது ஆகும். இந்த ஆண்டு, அரசாங்கம் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விலக்குகள் இல்லாமல் குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது. பல்வேறு விலக்குகளை உள்ளடக்கிய பழைய முறை விட இது எளிதாகும். பழையது புதியது எது வேண்டுமோ நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் நிதி நிலைமைக்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க, இரண்டு முறைகளையும் ஒப்பிடுவது முக்கியம்.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
மகளிர் உரிமைத்தொகை: கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த மாதமே மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் எப்படி சேர்வது என்று இங்கே பார்க்கலாம்.
இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆன குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய முடியும். அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். அல்லது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை செய்யலாம். அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும்.
ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை வேண்டி மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட உள்ளன என்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் வெளியிட்டு உள்ளார் .
இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளத்தாக தகவல் வெளியாகி உள்ளது.
Paytm Payments Bank: Paytm Payments Bank ஜூலை 20, 2024 அன்று, NIL நிலுவைகளைக் கொண்ட செயலற்ற வாலெட்டுகள் மற்றும் முந்தைய ஆண்டு அல்லது அதற்கு மேல் எந்தப் பணப் பரிமாற்றங்களும் இருந்தால் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
Paytm Payments வங்கியின் இணையதளத்தின்படி, "கடந்த 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யாத மற்றும் பூஜ்ய இருப்பு வைத்திருக்கும் அனைத்து வாலெட்டுகளும் ஜூலை 20, 2024 முதல் மூடப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். பயனர்கள் தங்கள் பணப்பையை மூடுவதற்கு முன், 30 நாட்கள் அறிவிப்பு காலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு விதிகள், ஜூலை 1, 2024 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகள் பெறுவது நிறுத்தப்படும் என்று எஸ்பிஐ கார்டு அறிவித்துள்ளது. ஜூலை முதல் அமலுக்கு வரும் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ரிவார்டு புள்ளிகள் பொருந்தாத எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளின் பட்டியல் 15, 2024,
எஸ்பிஐ கார்டு இணையதளத்தின்படி: ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு சென்ட்ரல் எஸ்பிஐ செலக்ட்+ கார்டு சென்னை மெட்ரோ எஸ்பிஐ கார்டு கிளப் விஸ்டாரா எஸ்பிஐ கார்டு கிளப் விஸ்டாரா எஸ்பிஐ கார்டு பிரைம் டெல்லி மெட்ரோ எஸ்பிஐ கார்டு எதிஹாட் விருந்தினர் எஸ்பிஐ கார்டு எதிஹாட் விருந்தினர் எஸ்பிஐ பிரீமியர் கார்டு Fabindia SBI கார்டு Fabindia SBI கார்டு ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர் மும்பை மெட்ரோ எஸ்பிஐ கார்டு நேச்சரின் பேஸ்கெட் எஸ்பிஐ கார்டு நேச்சரின் பேஸ்கெட் எஸ்பிஐ கார்டு எலைட் ஓலா பணம் எஸ்பிஐ கார்டு பேடிஎம் எஸ்பிஐ கார்டு பேடிஎம் எஸ்பிஐ கார்டு ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு ஆகிய கார்டுக்கு இது பொருந்தும்.
ஜூலை சிலிண்டர் விலை:
சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களுக்கு முன் ₹23.50 உயர்ந்து ₹1,960.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சிலிண்டர் விலை ரூ.1,937இல் இருந்து ரூ.1,960.50 காசுகளாக உயர்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 4 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்தது.
அந்த வகையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் திடீரென வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1809ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ. 918க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 4 மாதங்களில் 100 ரூபாய் அதில் குறைந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications