செல்வமகள் சேமிப்பு திட்டம் + வருமான வரியில் மாற்றம்.. பிப்ரவரி 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்
சென்னை: 2025 பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு அரசு சேவைகள், திட்டங்களில் மாற்றங்கள் வர உள்ளன. அவை என்ன மாதிரியான மாற்றங்கள் என்று இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளது.
மாற்றம் 1:
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளன.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் மாற்றப்படலாம்.
மாற்றம் 2:
காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரலாம்.
அதேபோல் ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை உள்ள ஆடைகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படும். 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜனவரி மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்படும் இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும்.
மாற்றம் 3:
கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் 2 மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். 1. வருமான வரியில் பழைய முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள், அதாவது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். அதேபோல் 2. புதிய வரி முறையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு பின் எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி?:
₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம். நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி முறையில் 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். அதை மொத்தமாக விலக்கி அரசு சட்டம் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
பிப்ரவரி 1க்கு பிறகு இந்த புதிய விதி அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications