Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லெனின் முதல் முஜிபுர் ரஹ்மான் வரை.. நீல் முதல் கண்ணகி வரை..! சிலைகள் படுத்தும் பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லெனின் முதல் தொடங்கி தமிழ்நாட்டில் நீல் சிலை அகற்றுவது வரை உலக அளவில் போராட்டக்காரர்களால் பல தலைவர்களின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது வங்கதேசத்து முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலை இணைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலைகளைப் போராட்டக்காரர்கள் வெறித்தனமாக உடைத்து எறியும் யூடியூப் ஷாட்ஸ் நிறையவே பரவி வருகின்றன. அந்நாட்டில் பிரதமர் ஷேக் ஹசீனா கலவரக்காரர்கள் அச்சுறுத்தலுக்குப் பயந்து நாட்டைவிட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 300 இடங்களில் 200 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை ஹசீனா பெற்றிருந்தார். சில மாதங்களில் இந்த மாற்றம் அரங்கேறி இருக்கின்றது.

Lenin Mujibur Rahman

இப்படித்தான் சில ஆண்டுகள் முன்னர் வர்ஜீனியாவில் உள்ள சார்லட்டெஸ்வில்லில் மிகப்பெரிய வன்முறையை நடைபெற்றது. அப்போது பலரும் அங்குள்ள நினைவுச் சிலைகளை அடித்து நொறுக்கினர். தோராயமாக 1,500 நினைவுச் சின்னங்களை எவ்வாறு பாதுகாப்பது என்று அரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், 'நினைவுச் சின்னங்களை அடித்து நொறுக்கி அகற்றுவது வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு ஒப்பானது என்ற வாதத்தை முன்வைத்தார். ஆனால், நினைவுச் சின்னங்களை அகற்றிய போராட்டக்காரர்கள் அது இனவெறியின் அடையாளமாக இருக்கிறது என்று வாதிட்டனர். ஆகவே அவற்றைக் கௌரவப்படுத்தக் கூடாது என்று வாதிட்டனர்.

இதேபோல சம்பவம் 2003 இல் ஈராக்கில் நடந்தது. அங்கே அதுவரை இரும்பு மனிதராக உலக அரங்கில் வலம்வந்த சதாம் ஹுசைன் சிலை சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. 2011இல் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போரின்போது அழிக்கப்படாத நாஜி சின்னங்களை இடிக்க உத்தரவிடப்பட்டன. மேலும் நாஜி சின்னங்களை அமைப்பது, அது குறித்து பிரச்சாரம் செய்வதை அரசு தடைசெய்தது. பெர்லினில் நாஜி இரகசியப் போலீஸ் தலைமையகம் இடித்துத் தகர்க்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் விளாடிமிர் லெனின், ஜோசப் ஸ்டாலின் ஆகிய இரண்டு பெரும் தலைவர்களின் சிலைகள் பல இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1991 ஆம் ஆண்டில், மாஸ்கோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் சோவியத் ஒன்றியத்தின் இரகசிய போலீஸ் படையான கேஜிபியின் நிறுவனரான பெலிக்ஸ் டிஜெர்ஜின்ஸ்கியின் நினைவுச் சின்னத்தை இடித்துத் தள்ளியது. அதன் சாட்சியாக உடைக்கப்பட்ட மார்பளவு லெனின் சிலைகள், மூக்கு இல்லாத ஸ்டாலின் சிலைகள் அங்கே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Lenin Mujibur Rahman

இதேபோன்ற உடைந்த சிலைகள் ஹங்கேரியில் உள்ளன. புடாபெஸ்டின் மெமெண்டோ பூங்காவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட் காலத்தின் அடையாளங்களை எடுத்துச் சொல்லும் 42 கலைப் பொருட்கள் காட்சிக்கு அங்கே வைக்கப்பட்டுள்ளன.

அடுத்து ஸ்பெயின் உள்நாட்டுக் கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 2007இல் சட்டம் இயற்றப்பட்டது. ஏறக்குறைய 40 வருடங்கள் சர்வாதிகாரியாக நாட்டை ஆண்ட பிரான்சிஸ்கோ பிராங்கோவின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது பற்றி விதிகள் அங்கே வகுக்கப்பட்டன. இதேபோல கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன. தாலிபான்களின் இந்த வெறிச்செயலை உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்தன.

வரலாற்றில் சிலை உடைப்பு என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளன. சில ஆண்டுகள் முன்னால் இலங்கை நாடு திவாலானபோது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் வீடு சூறையாடப்பட்டது. அவர் வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை மக்கள் அள்ளிக்கொண்டு வீதிகளில் பறந்தனர். அங்கே ராணுவமும் காவல்துறையும் செய்வது அறியாது கை கட்டி வேடிக்கை பார்த்தது. இப்போது அதே நிலை வங்கதேசத்திற்கு வந்துள்ளது. ஜேசிபி கனரக வாகனத்தை வைத்து வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மானின் சிலைகளைப் போராட்டக்காரர் உடைத்து எறிகின்றனர். கூடவே வீடுகளில், அரசு அலுவலகங்களில் உள்ள புகைப்படங்கள் வீதியில் தூக்கி எறியப்படுகின்றன.

இந்த மாதிரியான சிலை உடைப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து சின்ன சின்னதாக வருகின்றன. வெள்ளையர் ஆட்சியின் அடையாளமாக இருக்கும் நீல் சிலை அகற்றக் கோரி பெரிய போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. கண்ணகியின் சிலை விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. அவ்வப்போது அம்பேத்கர் சிலையை உடைப்பது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது என சில சம்பவங்களைச் சொல்லலாம்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் அண்ணாசாலையில் வைக்கப்பட்ட சிலை கூட வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டது. அப்போது மு கருணாநிதி, 'அந்தச் சிறுவன் என் மார்பில்தானே குத்தினான். முதுகில் குத்தவில்லையே' என்று வசனம் பேசினார். அதை இன்றுவரை மறக்காமல் அவரது தொண்டர்கள் சுட்டிக்காடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+