பெண்களுக்கு மாநில அரசுகள் தரும் உதவி தொகை.. எந்த மாநிலத்தில் அதிகம்! எங்கு குறைவு? தமிழகம் எங்கே?
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டைத் தொடர்ந்து இப்போது பல்வேறு மாநிலங்களும் இதேபோன்ற உரிமை தொகை திட்டங்களை அறிவித்துள்ளன. அதன்படி இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன மாதிரியான உதவித் தொகை திட்டம் அமலில் உள்ளது. இதன் கீழ் பெண்களுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பெண்களுக்கு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பொருளாதார சுதந்திரம் என்பது இன்னுமே பெண்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அனைத்து பெண்களுக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. அதில் ஒன்று தான் மாதாந்திர உதவித் தொகை திட்டம்.

தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபைத் தேர்தல் நடந்தபோது முதலில் இது வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. இதற்குப் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருந்த சூழலில், அதன் பிறகு பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டன. எல்லா மாநிலங்களிலும் பெண்களிடையே வரவேற்பைப் பெறும் திட்டமாகவே இது இருக்கிறது. இப்போது இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.. எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித் தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மஹிலா சம்ரித்தி யோஜனா - டெல்லி
நேற்று மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகிளா சம்ரிதி யோஜனா திட்டம் குறித்து அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், டெல்லியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பெண்கள் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும். நேற்று முதலே இதற்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 கிடைக்கும்.
சுபத்ரா யோஜனா - ஒடிசா
இந்தத் திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. சுபத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் உள்ள 21 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அதாவது மாதம் ரூ.830 என்ற விகிதம் வழங்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் மற்றும் சர்வதேச மகளிர் தினங்களில் ரூ.5,000 என்று இரு தவணைகளாக உதவித் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் தகுதியான பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இதன் மூலம் ஒடிசாவில் உள்ள சுமார் ஒரு கோடி பேர் பயனடைகிறார்கள்.
லாட்லி பெஹ்னா யோஜனா - மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச அரசு பெண்களுக்கு நிதி உதவி வழங்கக் கடந்த 2023 மார்ச் மாதம் இந்த லாட்லி பெஹ்னா யோஜனாவை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ₹1,250 உதவித்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மத்த பிரதேசத்தில் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் பாஜக வெல்ல இத்திட்டத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
க்ருஹா லட்சுமி யோஜனா - கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு 2023ஆம் ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான க்ருஹா லட்சுமி யோஜனாவை செயல்படுத்தியது. இதில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களின் பெண் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். கடந்த பிப்ரவரி 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் மூலம் 1.33 கோடிக்கும் அதிகமான பெண்கள் பலன் பெறுகிறார்கள். 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்தத் திட்டத்திற்கு ரூ.28,608 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா - மகாராஷ்டிரா
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அங்குள்ள பாஜக கூட்டணி அரசு இதை அறிவித்தது. இதன் மூலம் 21 முதல் 65 வயதுடைய தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படுகிறது. இது தவிர இத்திட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.
லட்சுமி பந்தர் திட்டம் - மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு கடந்த 2021ஆம் ஆண்டு லட்சுமி பந்தர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் 25 முதல் 60 வயதுடைய தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,200 வழங்கப்படும். இந்த உLதி தொகை திட்டத்திற்குத் தகுதி பெற "ஸ்வஸ்தியசாதி" திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட சில விதிமுறைகள் உள்ளன.
முக்கிய மந்திரி மையா சம்மான் யோஜனா - ஜார்கண்ட்
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 21 முதல் 50 வயதுடைய பெண்கள் பலன் பெறும் வகையில் இந்த நிதியுதவி திட்டத்தை அறிவித்தார். இதில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
மகளிர் உரிமை தொகை- தமிழ்நாடு
நாட்டிலேயே தமிழ்நாடு தான் மகளிருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலில் வாக்குறுதியாக அறிவித்தது. கடந்த 2021ம் ஆண்டு இது குறித்த வாக்குறுதியை திமுக அளித்த நிலையில், 2023 செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. 21 வயதான பெண்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கப்படும்.. இந்தத் திட்டத்தின் கீழ் 1.06 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பலன் பெறுகிறார்கள்.
ஹரியானா
கடந்தாண்டு ஹரியானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்த போது அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே இதேபோன்ற பெண்கள் உதவித் தொகை திட்டத்தை அறிவித்திருந்தன. 18 முதல் 60 வயதான பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்திருந்தது. பாஜக மாதம்தோறும் ₹2,100 வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. அந்தத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை அமைத்த நிலையில், விரைவில் இந்தத் திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications