Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் ஓடும் ரயிலிலேயே பீட்சா டெலிவரி.. இந்திய ரயில் சேவை பெஸ்ட்டுங்க.. வெளிநாட்டினர் செம ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏங்க.. இங்க பாருங்க.. மதுரை ரயில் பயணத்தில் பாதியிலேயே பீட்சா ஆர்டர் செய்தால் சரியான நேரத்தில், சரியான பிளாட்பார்மில் டேஸ்ட்டான பீட்சாவை கொண்டு வந்து தாராங்கங்க. ரயில் பெட்டிகள் சுத்தமாகவும், லக்கேஜ் வைக்க ஏதுவாகவும், தனி கேபின் வசதியும் உள்ளது என்று வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்திய ரயில்வே துறையை பாராட்டி உள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அல்லது தம்பதிகள் இந்தியாவுக்கு தொடர்ந்து சுற்றுலா வந்து செல்கின்றனர். இதில் பலரும் யூடியூப் சேனல்கள் வைத்துள்ளனர். இவர்களின் நம் நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து அதனை வீடியோவாக யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர். நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு, பழக்க வழக்கங்கள், போக்குவரத்து, இயற்கை சூழல் உள்பட பல்வேறு அம்சங்களை அவர்கள் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

from-pizza-delivery-in-madurai-station-how-foreign-travellers-fell-in-love-with-indian-train-journe

இந்நிலையில் தான் இந்திய ரயில்வே துறையை பார்த்து வெளிநாட்டினர் வியந்துள்ளனர். விமானம், பஸ் உள்பட பிற பயணங்களை ஒப்பிடும்போது ரயில் பயணம் குறைந்த செலவு கொண்டது. இதனால் பல வெளிநாட்டினர் ரயில்களில் பயணித்து மக்களை சந்தித்து வருவதோடு, பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். சமீப காலமாக வெளிநாட்டு பயணிகள் நம் நாட்டின் ரயில்களில் பயணம் செய்து தங்களின் அனுபவங்களை வெளியிட்டுள்ளனர். அதில் இந்திய ரயில்வே துறையை புகழ்ந்துள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

ஸ்காட்லாந்து விலாக்கர்

ஸ்காட்லாந்தை சேர்ந்த ‛விலாக்கர்' ஹூக் சமீபத்தில் நம் நாட்டில் ரயிலில் பயணித்தார். அவர் ஏசி கோச்சில் சென்றார். ரயில் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே டிடிஆர் சென்று டிக்கெட்டை பரிசோதித்தார். அதனை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். ரயில் புறப்பட்ட உடன் டிக்கெட் பரிசோதனை நடந்தது. இந்தியன் ரயில்வே நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகள் சுத்தமாக உள்ளது. எனக்கு பிடித்துள்ளது. நான் ஜப்பான், கொரியா, தைவான் ரயில்களில் பயணித்துள்ளேன். இந்திய ரயில்வே சிறப்பாக உள்ளது. இருக்கைகளில் ஸ்கிரீன் உள்ளது. பயணிகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கிலாந்தில் இத்தகையை சேவைகள் இருந்தாலும் செலவு அதிகம். ஆனால் இங்கு குறைந்த செலவில் உள்ளது என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு தம்பதி

அதேபோல் வெளிநாட்டு தம்பதி கிரீஸ் மற்றும் ப்ளோ ஆகியோர் தங்களின் இந்திய ரயில் பயணத்தை விவரித்துள்ளனர். இவர்கள் ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ராவுக்கு பர்ஸ்ட் கிளாஸ் ஏசி பெட்டியில் பயணித்தனர். இது 4 மணிநேர பயணமாகும். அதனை அவர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அப்போது ரயில் பெட்டியில் வழங்கப்பட்டு இருந்த தனி 2 படுக்கை வசதியுடன் வழங்கப்பட்டு இருந்த கேபினை பார்த்து வியப்படைந்தனர். பெட் கிளீனாக இருந்தாகவும், கண்ணாடி, பெரிய விண்டோ இருப்பதை பாராட்டி உள்ளனர். அதேபோல் லக்கேஜ் வைக்க போதிய இடம் இருப்பதாகவும் அவர்கள் சொல்லினர். பிற நாடுகளில் ரயில்களில் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் இந்திய ரயில்களில் தனி கேபின் வசதியுடன் சேவை வழங்கப்படுகிறது. இது ரிலாக்ஸாக இருந்தது என கூறியுள்ளனர்.

ஹாட் ஸ்நாக்ஸ்

அதேபோல் கனடாவை சேர்ந்த ராய்செல் ரெய்மர் ஹர்லிரயிலில் பயணித்தார். அவர் அதிகாலை 5 மணிக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டனர். ரூ.1000 டிக்கெட்டில் அவர் ஏசி கோச்சில் பயணித்தார். அப்போது ரயில்வே ஊழியர்கள் அவரிடம் பழகியதை பாராட்டி உள்ளார்.

சமோசா உள்பட ஹாட் ஸ்நாக்ஸ் ரயிலில் விற்பனை செய்யப்படுவதை வரவேற்றார். மேலும் இந்தியாவில் ரயில் பயணம் என்பது செலவு குறைந்ததாகவும், திருப்திகரமானதாகவும், உண்மையில் பாதுகாப்பாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மதுரையில் பீட்சா டெலிவரி

அதேபோல் பிரிட்டன் விலாக்கர் ஜஸ்டின் முர்பி 14 மணிநேரம் ரயிலில் பயணித்தார். பாதி பயணத்தில் அவரும் அவரது நண்பர்களும் பீட்சா ஆர்டர் செய்தனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் சென்றபோது பீட்சா அவர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது. ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தாலும் சரியான நேரத்தில், சரியான பிளாட்பாரத்தில் டெலிவரி ஊழியர் பீட்சாவை சுடச்சுட டெலிவரி செய்ததாக அவர் புகழ்ந்துள்ளார்.

அதோடு பீட்சாவுக்கு 10 மதிப்பெண்ணுக்கு 11 மதிப்பெண் வழங்குவதாகவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது நம் நாட்டில் ரயில் பயணத்தில் உள்ள வசதிகளை வெளிநாட்டினருக்கு எடுத்து காட்டும் வகையில் உள்ளது.

வந்தே பாரத் ரயில்

மேலும் பிரிட்டன் விலாக்கர் சார்லி வந்தே பாரத் ரயிலில் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்றார். அப்போது ரயில் பெட்டி சுத்தமாக உள்ளது உள்பட பல்வேறு வசதிகளை பார்த்து ஆச்சரியமடைந்தார். அதன்பிறகு பெட்டிகளில் போதிய இடவசதி இருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டினார். ஜன்னல்கள் பரந்து விரிந்து கண்ணாடி வசதியுடன் இருப்பது தன்னை கவர்ந்ததாக கூறினார்.

காலை உணவு, காபி, செய்தித்தாள் உள்ளிட்டவை ரயிலில் கிடைப்பதை சுட்டிக்காட்டி பாராட்டினார். நான் விஸ்டாடோம் ரயிலில் (Vistadome train)பயணிக்க நினைத்தேன். ஆனால் வந்தே பாரத் ரயில் தான் கிடைத்தது. உண்மையில் இந்த 8 மணிநேர பயணம் எனது எதிர்பார்ப்பை தாண்டி சிறப்பான அனுபவத்தை கொடுத்தது என்ற பாராட்டி உள்ளார்.

இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட்

இப்படி வெளிநாட்டு பயணிகள் இந்திய ரயில்வேயின் ரயில் சேவையை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இது நம் நாட்டுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும். ஏனென்றால் நம் நாட்டை பற்றி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பொதுவான ஒரு கருத்து இருக்கும். ஆனால் அந்த கருத்துகளை உடைத்தெறிந்து இந்தியா ரயில்வே துறையில் மக்களுக்கான அனைத்து சேவைகளையும் சிறப்பாக வழங்கி வருகிறது என்பதை இந்த வீடியோக்கள் காட்டுகின்றன.

இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் நம் நாடு குறித்து இருக்கும் தவறான எண்ணங்கள் குறைந்து நம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+